சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு சுமார் 200,000 பராமரிப்புப் பொட்டலங்கள்..!

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு சுமார் 200,000 பராமரிப்புப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது கட்டுமானத் துறையில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு, சிங்கப்பூர் சொத்துச் சந்தை மேம்பாட்டாளர்கள் சங்கம் அவற்றை வழங்கியதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் மேலும் 7 நோய் பரவல் குழுமங்கள் அடையாளம் – MOH..!

இந்த பொட்டலங்களில் சோப், பல் துலக்கும் ப்ரஸ், பற்பசை, சவரம் செய்வதற்கான சாதனம் போன்றவை அடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இக்கட்டான COVID-19 காலக்கட்டத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு உதவுவது இதன் முக்கிய நோக்கம் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் அந்த சங்கம், வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளுக்கு சுமார் 800 மின்விசிறிகளையும் நன்கொடையாக வழங்கியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவற்றை வெளிநாட்டு ஊழியர்கள் மையத்திடம் சிங்கப்பூர் சொத்துச் சந்தை மேம்பாட்டாளர்கள் சங்கம் வழங்கியுள்ளது. அந்நிகழ்ச்சியில், தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸின் தலைமைச் செயலாளர் இங் சீ மெங்(Ng Chee Meng) கலந்துகொண்டார் என்று செய்தி குறிப்பிட்டுள்ளது.

மேலும் படிக்க : COVID-19: சிங்கப்பூரில் மேலும் இருவர் உயிரிழப்பு – சுகாதார அமைச்சகம்..!