தொடர்பில்லாத COVID-19 சமூக அளவிலான சம்பவங்களில் பாதி, கட்டுமானத் துறையைச் சேர்ந்தவை..!

About half of unlinked COVID-19 community cases detected after circuit breaker were from construction sector: Lawrence Wong
About half of unlinked COVID-19 community cases detected after circuit breaker were from construction sector: Lawrence Wong (REUTERS/Edgar Su)

“சர்க்யூட் பிரேக்கர்” நடவடிக்கைக்கு பின்னர், கண்டறியப்பட்ட தொடர்பில்லாத COVID-19 சமூக அளவிலான சம்பவங்களில் பாதி கட்டுமானத் துறையைச் சேர்ந்தவை அல்லது கட்டுமானம் தொடர்பான நடவடிக்கைகளுடன் தொடர்புடையவை என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் (ஜூலை 7) தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் கூட்டத்தில் பேசிய திரு வோங், சிங்கப்பூரின் முதல் கட்டத்தில் 60 சதவீத சமூக அளவிலான தொற்று பாதித்த நபர்களுக்கு ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பு உள்ளதாக குறிப்பிட்டார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளை முதல் சம்பவம் உறுதி செய்யப்பட்டபோதே மூடியிருக்க வேண்டும் – டான் செங் போக்..!

மேலும் மீதமுள்ள சுமார் 40 சதவீதம், தொடர்பு கண்டறியப்படவில்லை என்றும் கூறினார்.

கட்டுமானத் துறையில், தொடர்பு அடையாளம் காணப்படாத சம்பவங்களில் பெரும்பாலானவை கண்காணிப்பு நடவடிக்கை மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளன.

மேலும், தங்கும் விடுதிகளில் கடுமையான துப்புரவுப் பணிகள் அவசியம் என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

கட்டுமானத்துறை சார்ந்த கிருமித்தொற்றுச் சம்பவங்கள், விழிப்புடன் இருக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதாகவும் திரு. வோங் மேற்கோள்காட்டினார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மேலும் 384 வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் COVID-19 முற்றிலும் இல்லை..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook https://www.facebook.com/tamilmicsetsg/
?? Helo          http://m.helo-app.com/al/vppxQmsFr
?? Twitter      https://twitter.com/tamilmicsetsg
??Telegram  https://t.me/tamilmicsetsg
?? Sharechat https://sharechat.com/tamilmicsetsg