சிங்கப்பூரில் கட்டுமானத்துறைக்கு உதவிபுரிய இரண்டு உதவி நிலையங்கள்..!

வேலை தேடும்போதும், வேலையிடத்திலும் காட்டப்படும் பாகுபாடு - சிங்கப்பூரில் குறைவாக பதிவு
Photo: REUTERS

பணிகளை மறுதொடக்கம் செய்ய விண்ணப்பிக்க உதவி தேவைப்படும் கட்டுமான நிறுவனங்கள் இப்போது கட்டிடம் மற்றும் கட்டுமான ஆணையம் (பி.சி.ஏ) அமைத்த இரண்டு உதவி நிலையங்களுக்கு செல்லலாம்.

Braddell மற்றும் ஜுராங் ஈஸ்ட்டில் அமைந்துள்ள BCA வளாகத்தில், “restart clinics” என்று அழைக்கப்படும் இந்த இரண்டு நிலையங்களும் திங்கள்கிழமை திறக்கப்படும்.

இதையும் படிங்க : உணவு, சாதனங்கள் அல்லது உணவுப் பொட்டலங்கள் மூலமாக கொரோனா கிருமி பரவுமா? – சிங்கப்பூர் உணவு அமைப்பு விளக்கம்..!

அவை வார நாட்களில் காலை 8.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை, மேலும் மதியம் 1.30 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது,.

தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ, நேற்று பேஸ்புக் பதிவில் இதை தெரிவித்தார்.

மேலும், கட்டிடம் மற்றும் கட்டுமான ஆணையமும், அமைப்புகளும் துறைசார்ந்தோருடன் அணுக்கமாகப் பணியாற்றித் தேவையான உதவிகளைச் செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.

பாதுகாப்பாகவும், மேலும் துரிதமாகவும் கட்டுமானத் துறை மீண்டும் பணிகளைத் தொடங்க இந்த புதிய முறை கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : சிங்கப்பூருக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்துவதற்கு பதிலாக மாற்றுவழி பற்றி அமைச்சர் ஓங் யீ காங் கருத்து..!

இதையும் படிங்க : சில தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் வெளியே செல்வதற்கான நிபந்தனைகள்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg