கட்டுமானத் துறை Work permit ஊழியர்கள் தான் டாப் – அதிகரிக்கும் வெளிநாட்டு ஊழியர்களின் வரத்து

workplace injury compensation-limits update mom
(Photo by Roslan RAHMAN / AFP)

சிங்கப்பூர் அதன் எல்லைகள் மீண்டும் திறந்துள்ள இந்த சூழலில், வெளிநாட்டு ஊழியர்களின் மொத்த வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது.

முக்கியமாக கட்டுமானத் துறையில் Work permit அனுமதி வைத்திருப்பவர்கள் அதிகமானோர் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்ட நாகேந்திரன் உடல் மலேசியா சென்றது… கண்ணீரில் மிதந்த குடும்பம்!

தொற்றுநோய்க்கு முந்தைய சூழ்நிலையுடன் ஒப்பிடையில், குடியிருப்பாளர்கள் வேலையின்மை நிலையானதாக உள்ளது என்று மனிதவள அமைச்சகம் (MOM) கூறியது.

அதே போல, ஆட்குறைப்பும் மிகக் குறைவான அளவிற்கு குறைந்துள்ளதாகவும் MOM கூறியுள்ளது.

கடந்த ஜனவரி முதல் மார்ச் வரை அதிகமான வெளிநாட்டு ஊழியர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர், அவர்கள் Work Permit ஊழியர்கள் என்றும் அதன் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

தான் ஓட்டிய கனரக வாகனம் தனக்கே எமனாய் வந்த சோகம் – தமிழக ஊழியர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பரிதாபம்

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களின் அதிகரிப்பால், காலாண்டின் மொத்த வேலைவாய்ப்பு வாய்ப்பு விகிதம் அதிகரித்துள்ளது.

இன்று வியாழக்கிழமை (ஏப்ரல் 28) வெளியிடப்பட்ட தொழிலாளர் சந்தை அறிக்கையின்படி, முதல் காலாண்டில் புலம்பெயர்ந்த வீட்டுப் பணிப்பெண்களைத் தவிர்த்து, மொத்தம் வேளையில் உள்ளோர் 41,100 ஆக அதிகரித்துள்ளது.

சிங்கப்பூரில் இறுதியாக தூக்கிலிடப்பட்ட நாகேந்திரன் கே. தர்மலிங்கம்… சட்டம் தன் கடமையை செய்தது!