சிங்கப்பூரில் இதுவரை 2,100-க்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பான இடைவெளி விதிகளை மீறியதற்காக பிடிபட்டுள்ளனர்..!

சிங்கப்பூரில் சர்க்யூட் பிரேக்கர் நடவடிக்கை தொடங்கியதிலிருந்து, 2,100-க்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பான இடைவெளி விதிகளை மீறிய காரணத்திற்காக பிடிபட்டுள்ளனர்.

அதே போல் 500-க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் வீடுகளுக்கு வெளியே முகக்கவசம் அணியாமல் சென்ற காரணத்திற்காக பிடிபட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : “சிங்கப்பூரர்களைப் பராமரிப்பதைப் போலவே, வெளிநாட்டு ஊழியர்களையும் பராமரிப்போம்” – பிரதமர் லீ..!

கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி சர்க்யூட் பிரேக்கர் நடவடிக்கை தொடங்கியதிலிருந்து விதிகளை மீறியவர்கள் பற்றி சுற்றுச்சூழல் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் மசகோஸ் சுல்கிஃப்லி முகநூலில் (ஏப்ரல் 21) குறிப்பிட்டுள்ளார்.

“பெரும்பாலான சிங்கப்பூரர்களும் குடியிருப்பாளர்களும் இந்த நடவடிக்கைகளை கடைப்பிடிப்பதாகவும், அதில் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய நாட்களில் சமூக தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இருப்பினும், குறைந்த அளவிலான மக்கள் தங்கள் பங்கை இன்னும் செய்யவில்லை என்றும் திரு மசகோஸ் கூறியுள்ளார்.

தோட்டங்கள், பூங்காக்கள் போன்ற இடங்களில் உள்ள அனைத்து கார்பார்க்குகளும் (carparks) இந்த காலகட்டத்தில் மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் “சர்க்யூட் பிரேக்கர்” ஜூன் 1 வரை நீட்டிப்பு – பிரதமர் திரு. லீ அவர்களின் உரை தொகுப்பு..!