COVID-19: வேலை அனுமதி உடையோர் மனிதவள அமைச்சகத்தின் அனுமதி பெற வேண்டும்..!

COVID-19: MOM Entry Approval and Stay-Home
MOM Entry Approval and Stay-Home Notice Requirements for Work Pass Holders

சிங்கப்பூருக்குள் நுழைய / சிங்கப்பூருக்குத் திரும்பத் திட்டமிடும் வேலை அனுமதிச்சீட்டு உடையோர் (அவர்களைச் சார்ந்தோர் உட்பட), தங்களின் பயண முறைகள் பாராமல், சிங்கப்பூருக்குள் நுழைவதற்கான அனுமதியைப் பெற, மனிதவள அமைச்சகத்திடம் (MOM) விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

மேலும் சிங்கப்பூருக்கு வருவதற்கு 10 நாட்கள் முன்பு வரை விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : COVID-19: வேலை அனுமதி அட்டை உடையவர்கள் கவனத்திற்கு – மனிதவள அமைச்சகம்..!

முதலாளிகள், வேலை அனுமதிச்சீட்டு உடையவர்களை சிங்கப்பூருக்குப் புறப்பட்டு வரச் சொல்வதற்கு முன்னர், MOM-இன் அனுமதிக்காகக் காத்திருக்கவேண்டும்.

அதனை தொடர்ந்து, சிங்கப்பூர் திரும்பும் அனைவருக்கும் 14 நாள் வீட்டிலேயே இருப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படும்.

தகுதி வரம்புகளுக்கு இணங்கி நடக்காத, தவறிழைக்கும் முதலாளிகள், ஊழியர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் MOM குறிப்பிட்டுள்ளது.

மலேசியாவிலிருந்து நிலம், கடல் வழி சிங்கப்பூருக்கு அத்தியாவசிய சேவை வழங்குவோர், பொருட்களை விநியோகம் செய்வோர் ஆகியோருக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. Go.gov.sg/mom25mar

இதையும் படிங்க : COVID-19: வெளிநாட்டு ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடு; மீறினால் வேலை அனுமதி ரத்து – MOM..!

#coronavirusSingapore #coronavirusnews #coronavirusupdateinSingapore #Tamilnews #coronavirusupdate #coronavirusSingaporecases #coronavirusinSingapore #WorkPass #SingaporeLatestTamilnews #சிங்கப்பூர்தமிழ்செய்திகள் #Singaporetamil