COVID-19: சிங்கப்பூர் மெக்டொனால்டு (McDonald’s) காலவரையின்றி மூடல் – ஊழியர்களுக்கு சம்பளம் உறுதி..!

COVID-19: McDonald’s Singapore extends closure of restaurants indefinitely
COVID-19: McDonald’s Singapore extends closure of restaurants indefinitely

சிங்கப்பூரில் துரித உணவகம் மெக்டொனால்டு வரும் மே 5 ஆம் தேதி மீண்டும் திறக்கப்படவிருந்த நிலையில், மீண்டும் அது காலவரையின்றி மூடப்படுகிறது என்று உணவகம் (ஏப்ரல் 30) ​​முகநூல் பதிவில் தெரிவித்துள்ளது.

மெக்டொனால்டு அதன் கடைகள் எப்போது திறக்கும் என்பதை பற்றி அந்த பதிவில் குறிப்பிடவில்லை, ஆனால் தற்போதுள்ள COVID-19 சூழ்நிலையின் காரணமாக அந்நிறுவனம் இன்னும் சிறிது காலம் மூடப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : COVID-19: ஊழியர்களுக்கு உதவவும், தேவையான அனைத்து முயற்சிகளையும் முதலாளிகள் மேற்கொள்ள வேண்டும் – பிரதமர் லீ..!

அத்தியாவசிய சேவை கட்டமைப்பின் கீழ், வரும் மே 4 முதல் அதன் சேவைகள் மறுதொடக்கம் செய்யப்படும் என்று அது ஏற்கனவே விளக்கமளித்து இருந்தது, ஆனால் தற்போது அதை நீட்டித்துள்ளது.

அதன் உணவக சேவைகள் முதன் முதலில் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி அன்று நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : அனைத்து கிளைகளிலும் உணவக சேவைகளை நிறுத்தி வைப்பதாக சிங்கப்பூர் மெக்டொனால்டு (McDonald’s) அறிவிப்பு..!

ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக மூடல் இன்னும் சிறிது காலம் நீட்டிக்க முடிவு செய்துள்ளதாக அது தெரிவித்துள்ளது.

மீண்டும் திறக்கும் தேதியை தீர்மானிப்பதற்கு முன் சமூகத்தில் COVID-19 நிலைமையை தொடர்ந்து கண்காணிப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இந்த தற்காலிக மூடலின்போது ஊழியர்களின் வேலைகள் பாதுகாப்பானதாக இருக்கும் என்றும், அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படும் என்றும் மேலும் மெக்டொனால்டு உறுதியளித்துள்ளது.

இதையும் படிங்க : COVID-19 பரிசோதனையின் முக்கியத்துவம் குறித்து சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் விளக்கம்…!