மீண்டும் முதலில் இருந்தா.. “முகக்கவசம்” இனி தேவை – வரும் டிச.19 முதல் தினசரி பாதிப்பு வெளியாகும்

COVID-19
Question and answer about COVID-19 in Singapore

சிங்கப்பூரில் கோவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கை 56,000-ஐ தொட்டதாக சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

இந்நிலையில், நோய்த்தொற்றுகள் அதிகரித்து வருவதால் கூட்டமான இடங்களில் முகக்கவசம் அணியுமாறு சுகாதார அமைச்சகம் (MOH) பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.

பெண்களை குறிவைத்து 18 ஆண்டுகளாக தகாத படங்களை எடுத்துவந்த கட்டுமான துறையை சேர்ந்தவருக்கு சிறை

உடல்நிலை நன்றாக இருந்தாலும்கூட, கூட்ட நெரிசலான இடங்களில் முகக்கவசம் அணியுமாறு அது சொன்னது.

உடல்நிலை சரியில்லாத நபர்கள் மற்றும் கடுமையான சுவாச பிரச்சனை (ARI) இருப்போரும் மற்றவர்களுடனான தொடர்பைத் தவிர்க்கும் படியும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது

பாதிப்பு அறிகுறிகள் குறையும் வரை வீட்டிலேயே இருக்கும் படியும் MOH அறிவுறுத்தியுள்ளது.

கோவிட்-19 க்கு எதிரான முதன்மை தற்காப்பாக தடுப்பூசிகள் இருப்பதால், மேம்படுத்தப்பட்ட தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளுமாறு பொதுமக்களை அது வலியுறுத்தியது.

வரும் டிச. 19 முதல், பாதிக்கப்படும் நோயாளிகளின் தினசரி எண்ணிக்கையை MOH இணையதளம் வெளியிடும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் மீண்டும் சர்க்யூட் பிரேக்கர் எனும் அதிரடி திட்டமா..? – உண்மை என்ன?

விசா விண்ணப்பங்களுக்கு உதவி செய்ய தகாத சேவை.. சிக்கிய ICA அதிகாரி