சிங்கப்பூரில் 12 முதல் 15 வயதுடையவர்கள் ஃபைசர் கோவிட் -19 தடுப்பூசி போட்டுக்கொள்ள அரசாங்கம் அனுமதி

(photo: mothership)

பன்னிரண்டு முதல் பதினைந்து வயத்துக்கு உட்பட்டோர் கோவிட்-19க்கு எதிராக ஃபைசர்-பயோஎன்டெக் (Pfizer-BioNTech) தடுப்பூசியை போட்டுக்கொள்ளுமாறு சுகாதாரத்துறை அமைச்சர் ஓங் யீ குங் அறிவித்துள்ளார்.

கோவிட் -19 பாதுகாப்பு பணிகளுக்கான அமைச்சக பணிக்குழுவின் இணைத்தலைவரான திரு. ஓங், இணைய வழி பத்திரிகையாளர் சந்திப்பில், சுகாதார அறிவியல் ஆணையம் (HSA ) ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி குறிப்பிடப்பட்டுள்ள வயதினர் பெறுவதற்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளது என தெரிவித்தார்.

வெளிநாட்டு ஊழியர்களை நாட்டுக்குள் அனுமதிக்க வேண்டும் – கட்டுமான நிறுவனங்கள் கோரிக்கை!

இது தொடர்பான முடிவுக்கு கோவிட் -19 தடுப்பூசிகள் குறித்த நிபுணர் குழு ஆதரித்தது எனவும் அவர் அதில் கூறியிருந்தார்.

மேலும் அவர் கூறுகையில்; ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி குறிப்பிடப்பட்டுள்ள வயதினருக்கு சிறந்த செயல்திறனுடனும், பாதுகாப்புடனும் வேலை செய்யும் என HSA மற்றும் நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளதாக கூறினார்.

கல்வி அமைச்சகம் (MOE) சுகாதார அமைச்சகத்துடன் (MOH) இணைந்து செயல்பட்டு குறிப்பிட்ட வயதினருக்கான தடுப்பூசி போடும் திட்டத்தை வழி நடத்தும் என தெரிவித்திருந்தார்.

போன வருடத்தை விட இந்த வருடம் பதினைந்து வயதுக்குற்பட்ட பிள்ளைகள் அதிகம் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக MOH-இன் மருத்துவ சேவைகள் இயக்குனர் கென்னத் மாக் அந்த இணைய வழி செய்தியாளர் சந்திப்பில் கூறி இருந்தார்.

ஆயுதத்துடன் தன்னை தானே பூட்டிக்கொண்ட ஆடவர் மனநல சட்டத்தின்கீழ் கைது

குழந்தைகள் பாதுகாப்பு நடவடிக்கைகளில் குறைந்த விழிப்புணர்வு மற்றும் ஒழுக்கத்தை கடை பிடிக்கிறார்கள், அவர்களுக்கு தடுப்பூசி போடுவதன் மூலம் அவர்களுடன் அவர்களை சுற்றியுள்ள பெரியவர்களையும் பாதுகாக்கலாம் என இணை பேராசிரியரான கென்னத் தெரிவித்திருந்தார்.

மேலும், இந்த குறிப்பிட்ட வயது குழந்தைகளுக்காக மேற்கொள்ளப்பட்ட இந்த திட்டத்திற்கு முன்னுரிமை வழங்கலாமா என அதிகாரிகள் சிந்தித்து விரைவில் முடிவு எடுப்பார்கள் என அவர் தெரிவித்திருந்தார்.

நிதியமைச்சர் லாரன்ஸ் வோங் குறிப்பிட்டதாவது சிங்கப்பூர் தனது தடுப்பூசி திட்டத்தில் பல தடங்களைக் கொண்டுள்ளது இதில் ஒன்றான கல்வித்துறையை சார்ந்தவர்கள் ஆன ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் மீது கவனம் செலுத்தப்படும் என்பதாகும். அவர் மேலும் கூறுகையில், கல்லூரி விடுதிகளில் மாணவர்களுடன் சேர்த்து ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது என்றார்.

இந்த மாணவர்கள் வாழும் வகுப்புவாத அமைப்புகளில் தொற்றின் ஆபத்து அதிகம் என்பதற்காகவே விரைந்து தடுப்பூசி வழங்கப்பட்டதாக விளக்கமளித்தார் வோங். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கான தடுப்பூசி போடும் திட்டத்தை கல்வி சார்ந்த துறையில் சுகாதாரத்துறை மற்றும் கல்வித்துறை மேற்கொண்ட முதற் கட்ட முயற்சி என அவர் தெரிவித்திருந்தார்.

தடுப்பூசி போட்டுக்கொள்வது குழந்தைகளுக்கு மிகவு மாதுகாப்பானது அதனால், பெற்றோர்கள் எந்த விதத்திலும் அதனை மறுக்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அனைத்து பள்ளிகளும் மே 19 முதல் மே 28 வரை, பள்ளி காலம் முடியும் வரை முழுமையாக வீட்டிலிருந்து படிக்கும் அடிப்படையிலான கற்றலை (HBL) மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது அனைத்து தொடக்க, இடைநிலை மற்றும் ஜூனியர் கல்லூரி மாணவர்களுக்கும், மில்லினியா நிறுவனம் மற்றும் சிறப்பு கல்வி பள்ளிகளைச் சேர்ந்தவர்களுக்கும் பொருந்தும்.

இந்த வகையான தடுப்பூசி முதலில் பதினாறு வயது மேற்பட்டோருக்கே பரிந்துரைக்கப்பட்டதாகவும், ஆனால் அமெரிக்காவில், உணவு மற்றும் மருந்து நிர்வாகம் மே 10 அன்று ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசிக்கான அங்கீகாரத்தை விரிவுபடுத்தி 12 முதல் 15 வயதுடையவர்களுக்கு பயன்படுத்த அனுமதித்தது.

அதன் தொடர்ச்சியாகவே சுகாதார அமைச்சர் கன் கிம் யோங் நாடாளுமன்றத்தில், 12 முதல் 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளதா என்பதை சிங்கப்பூரின் HSA மதிப்பீடு செய்யும் என அறிவித்தார்.

சிங்கப்பூருக்குள் நுழைய வெளிநாட்டு ஊழியர்களுக்கு தடை விதிக்கலாமே? என்ற கேள்விக்கு மனிதவள அமைச்சத்தின் பதில்