மோசடியில் இருந்து வாடிக்கையாளர்களைப் பாதுகாக்க ‘DBS’ வங்கிக் கூடுதல் நடவடிக்கை!

How to open account in DBS bank for foreigners

சிங்கப்பூரில் வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் அவர்களது வங்கிக் கணக்கில் இருந்து பணத்தைத் திருடும் மோசடி கும்பலால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். குறிப்பாக, ‘OCBC’ வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு வங்கியை போல் போலி குறுஞ்செய்தியை அனுப்பி, லட்சக்கணக்கான சிங்கப்பூர் டாலர் மதிப்பிலான பணத்தை மோசடி கும்பல் ஏமாற்றியுள்ளது. இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், தங்கள் சேமிப்பு கணக்கில் வைக்கப்பட்டுள்ள பணத்தை முழுவதுமாக ‘Withdraw’ செய்து வருகின்றனர் ஒருசில வாடிக்கையாளர்கள்.

சிங்கப்பூரில் 1,000ஐ தாண்டிய Omicron பாதிப்பு – வெளிநாடுகளில் இருந்து வந்த 49 பேருக்கு உறுதி

வங்கி வாடிக்கையாளர்களிடம் பண மோசடியில் ஈடுபட்ட கும்பல் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேசமயம், தங்களது வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ள வங்கிகள், வாடிக்கையாளர்களின் டெபாசிட் பணத்தைப் பாதுகாக்கும் பொருட்டு கூடுதல் நடவடிக்கைகளை எடுத்து வருகிறன்றனர்.

அந்த வகையில், ‘DBS’ வங்கி நிர்வாகம் தனது வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல்களை அனுப்பியுள்ளது. அதில், “மோசடிகளில் இருந்து உங்களைப் பாதுகாக்க கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

“சிங்கப்பூரில் ஊழியர்களின் நலனை பாதுகாப்பதே முக்கிய நோக்கம்” – வேலையிடத்தில் காயமடைவதை தடுக்க புதிய முயற்சி

மோசடிகளில் இருந்து உங்களைப் பாதுகாப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். எனவே, ஆன்லைன் மோசடியில் இருந்து உங்களைப் பாதுகாக்க கூடுதல் நடவடிக்கைகளைச் செயல்படுத்தியுள்ளோம். அதன்படி, இன்று (21/01/2022) முதல் மறு அறிவிப்பு வரும் வரை வாடிக்கையாளர்களுக்கு அத்தியாவசியமற்ற SMS-கள் (Non-essential SMSes to retail and wealth customers) அனுப்புவது நிறுத்தப்படும்.

பாதுகாப்பு மற்றும் வர்த்தக அறிவிப்புகள் (Security and Trade Notifications) மற்றும் OTP அங்கீகாரம் (OTP authentication) போன்ற அத்தியாவசிய SMS- களை மட்டுமே பெறுவீர்கள். எனினும், அதில் கிளிக் செய்யக்கூடிய எந்த இணைப்புகளும் (No clickable links) இருக்காது. எங்கள் SMS- கள் எதிலும் இணைப்புகள் இருக்காது.

Breaking: சிங்கப்பூர் வரும் பயணிகளுக்கு எளிமையாகும் சோதனை கட்டுப்பாடுகள்!

எனவே, ‘DBS’ வங்கி அனுப்பியதாகத் தோன்றும் SMS- களில் உள்ள எந்த இணைப்புகளையும் கிளிக் செய்ய வேண்டாம். உங்கள் கணக்கு விவரங்கள் (Account Details), பயனர் ஐடி (User ID), PIN அல்லது OTP ஆகியவற்றை ஃபோன், மின்னஞ்சல் அல்லது SMS மூலம் நாங்கள் ஒருபோதும் கேட்க மாட்டோம்.

இம்மாதம் 19- ஆம் தேதி அன்று சிங்கப்பூரின் நாணய ஆணையம் (Monetary Authority of Singapore) மற்றும் சிங்கப்பூரில் உள்ள வங்கிகள் சங்கம் (Association of Banks in Singapore) ஆகியவற்றால் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள தொழில்துறை நடவடிக்கைகளுக்கு கூடுதலாக முன்னெச்சரிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன” என்று குறிப்பிட்டுள்ளது.

Breaking: முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு குறையும் தனிமை காலம்..!

அத்துடன், மோசடிகளில் இருந்து உங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்த விரிவான விளக்கத்தையும் வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு வங்கி நிர்வாகம் வழங்கியுள்ளது.