நிலநடுக்கத்தால் நிலைக்குலைந்திருக்கும் மொராக்கோவுக்கு சிங்கப்பூர் அரசு உதவிக்கரம்!

நிலநடுக்கத்தால் நிலைக்குலைந்திருக்கும் மொராக்கோவுக்கு சிங்கப்பூர் அரசு உதவிக்கரம்!
Photo: Singapore Red Cross

 

நிலநடுக்கத்தால் நிலைக்குலைந்திருக்கும் மொராக்கோவுக்கு சுமார் 50,000 சிங்கப்பூர் டாலர் நிதியுதவியை வழங்கவிருப்பதாக சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது.

ஜி20 உச்சி மாநாட்டிற்கிடையே பல்வேறு நாடுகளின் தலைவர்களைச் சந்தித்த சிங்கப்பூர் பிரதமர்! (புகைப்படங்கள்)

இது தொடர்பாக சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கடந்த செப்டம்பர் 08- ஆம் தேதி அதிகாலையில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், மொராக்கோ நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட மனிதாபிமான நெருக்கடிக்கு சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் பொது நிதி திரட்டும் முயற்சிகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், சிங்கப்பூர் அரசு தனது பங்களிப்பாக 50,000 சிங்கப்பூர் டாலர் நிதியை வழங்கும்.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள இ-பதிவுச் செய்யப்பட்ட சிங்கப்பூரர்களை வெளியுறவுத்துறை அமைச்சகம் அணுகியுள்ளது. நிலநடுக்கத்தால் சிங்கப்பூரர்கள் எவரும் பாதிக்கப்பட்டதற்கான தகவல் எதுவும் இல்லை. தூதரக உதவித் தேவைப்படும் சிங்கப்பூரர்கள், காசாபிளாங்காவில் (Casablanca) உள்ள கௌரவ துணைத் தூதரகத்தையோ (அல்லது) சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் 24 மணிநேர வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அலுவலகத்தைத் தொடர்புக் கொள்ளலாம்.

தன் மனைவியை தீர்த்துக்கட்டிய வெளிநாட்டு கணவர் – குற்றம் நிரூபணமானால் சிங்கப்பூரில் மரண தண்டனை உண்டு

அதன் விவரங்கள் பின்வருமாறு:

காசாபிளாங்கா கௌரவ துணைத்தூதரகம்:
தொலைபேசி எண்: +212- 529- 045- 013,
மின்னஞ்சல் முகவரி: singaporehcg.casablanca@gmail.com

24 மணி நேரமும் இயங்கும் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம்:

தொலைபேசி எண்: +65 6379 8800/8855,
மின்னஞ்சல் முகவரி: mfa_duty_officer@mfa.gov.sg

இவ்வாறு சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.