தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு, வேலை அனுமதி ரத்து செய்யப்பட்டு இருந்தாலும் ஊதியம் செலுத்த வேண்டும் – MOM..!

COVID-19 நடவடிக்கைகள் காரணமாக தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு, அவர்களின் வேலை அனுமதி ரத்து செய்யப்பட்டு இருந்தாலும் கூட ஊதியம் செலுத்த வேண்டும் என்று மனிதவள அமைச்சகம் (MOM) தெரிவித்துள்ளது.

தற்போது, COVID-19 பரவுவதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ​​தங்கும் விடுதிகளில் வசிக்கும் அனைத்து வெளிநாட்டு ஊழியர்களுக்கும் தங்கள் வளாகத்தை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மேலும் 5 நோய் பரவல் குழுமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது – MOH..!

கடந்த ஏப்ரல் 21-ம் தேதி மனிதவள அமைச்சர் ஜோசபின் தியோ அறிவித்த இந்த வெளியே செல்லத் தடை நடவடிக்கை, வரும் ஜூன் 1-ம் தேதி “சர்க்யூட் பிரேக்கர்” அதிரடி நடவடிக்கை முடியும் போது நிறைவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் சுமார் 315,000 வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் வசித்து வருகின்றனர்.

தனிமைப்படுத்தப்பட்ட தங்கும் விடுதிகளில் வசிக்கும் ஊழியர்கள் மருத்துவமனை விடுப்பில் இருப்பதாகக் கருதப்படும் என்றும் MOM தெரிவித்துள்ளது.

அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட முழு காலம் அல்லது தனது மருத்துவமனை விடுப்பைப் பயன்படுத்தும் வரை முதலாளிகள் தொடர்ந்து சம்பளத்தை செலுத்த வேண்டும் என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் ஒரே நாளில் 328 நபர்கள் COVID-19 தொற்றிலிருந்து முழுமையாக மீண்டுள்ளனர்..!

அதாவது வேலைவாய்ப்பு சட்டத்தின் கீழ், அனைத்து ஊழியர்களுக்கும் 60 நாட்கள் ஊதியம் பெறும் மருத்துவமனை விடுப்பு கிடைக்கும்.

கூடுதலாக, முதலாளிகள் தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடிந்த பின்னரே தங்கள் ஊழியர்களை திருப்பி அனுப்ப முடியும் என்றும் MOM தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களின் மருத்துவமனை விடுப்பு முடிவடைந்தாலும், முதலாளிகள், அவர்களின் தனிமைப்படுத்தும் காலம் நிறைவுபெறும் வரை, சம்பளத்துடன் கூடுதல் விடுப்பையும் அளிக்குமாறு MOM ஊக்குவிக்கிறது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் காவல்துறை அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக வெளிநாட்டு ஊழியர் மீது குற்றச்சாட்டு..!