சிங்கப்பூரில் தடுப்பூசி காரணமாக பாதிக்கப்படுவோருக்கு உதவித்தொகை..!

Professor Dan said the vaccines approved for use in crisis situations in Singapore, such as "Pfizer-Bio-Entech" and "Moderna", are safe and effective.

கொவிட்-19 தடுப்பூசியின் காரணமாக பக்கவிளைவுகளினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் நிதி உதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று சுகாதார அமைச்சு (MOH) தெரிவித்துள்ளது.

பக்கவிளைவுகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவரின் தகவல்களும் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய அளவில் போதைப்பொருள் பறிமுதல்

தடுப்பூசியினால் ஏற்பட்ட பக்கவிளைவுகளின் தாக்கம் மற்றும் கொடுக்கப்பட்ட தடுப்பூசி எந்த அளவிற்கு சம்பந்தப்பட்டது என்றும் ஆய்வு செய்வதற்கு தனி மருத்துவர்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் இருந்து சிகிச்சையை ஏற்று குணமடைந்தவர்களுக்கு S$2,000, அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு S$10,000 மற்றும் இதன் விளைவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களுக்கும் மற்றும் உடலில் நிரந்தர குறை ஏற்பட்டவர்களுக்கு $225,000 வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் குடிமக்கள், சிங்கப்பூர் நிரந்தர வாசிகள் மற்றும் சிங்கப்பூரில் தடுப்பூசி போட்டுக்கொண்ட நீண்டகால அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் ஆகியோர் இந்த உதவித்தொகை திட்டத்திற்கு தகுதி பெற்றவர்கள் ஆவர்.

வங்கி ATM அட்டை இனி வேண்டாம் – முகத்தை ஸ்கேன் செய்து உங்கள் தேவையை பூர்த்தி செய்யலாம்!