சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களின் சமீபகால வேலையிட மரணங்கள்: “இது மிக அதிகம், இதனை ஏற்றுக்கொள்ள முடியாது” – பிரதமர் லீ

qworkplace-safwty
MCI/Roslan Rahman via Getty Images

சிங்கப்பூரில் சமீபகாலமாக ஏற்படும் வேலையிட மரணங்களின் எண்ணிக்கை குறித்து இன்று (மே 9) தனது Facebook பதிவில் பிரதமர் லீ சியென் லூங் கூறியுள்ளார்.

இந்த ஆண்டில் இதுவரை 20 வேலையிட மரணங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் கவலையுடன் குறிப்பிட்டார்.

இது மிக அதிகம் என்றும், இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் பிரதமர் லீ கூறியுள்ளார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு முழுவதுமான நிலவரப்படி, சிங்கப்பூரில் 37 வேலையிட மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

இந்நிலையில், இன்று முதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க, அவசரகால மனிதவள அமைச்சகம், பணியிட பாதுகாப்பு மற்றும் சுகாதார அமைப்பு, NTUC சிங்கப்பூர் மற்றும் தொழில் கூட்டாளிகள் ஆகியவை அழைப்பு விடுத்துள்ளன.

இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதில் நிறுவனங்கள், “வேலையிட பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும், தங்கள் பாதுகாப்பு செயல்முறைகளை வலுப்படுத்த வேண்டும் மற்றும் ஊழியர்களால் எழுப்பப்படும் பாதுகாப்பு பிரச்சினைகளை உடனடியாக தீர்த்து வைக்க வேண்டும் என திரு லீ குறிப்பிட்டார்.”

தான் ஓட்டிய கனரக வாகனம் தனக்கே எமனாய் வந்த சோகம் – தமிழக ஊழியர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பரிதாபம்

சிங்கப்பூரில் மேலும் ஒரு வெளிநாட்டு ஊழியர் கோர விபத்தில் பலி