வெளிநாட்டு ஊழியர்களின் பாதுகாப்பு இடைவெளி; உறுதி செய்வது முதலாளிகளின் பொறுப்பு – MOM..!

COVID-19: Foreign workers Safe distancing measures
COVID-19: Foreign workers Safe distancing measures

சிங்கப்பூரில் தற்காலிகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள், பாதுகாப்பு இடைவெளியை கடைப்பிடிப்பதை உறுதி செய்வது முதலாளிகளின் பொறுப்பு என்று மனிதவள அமைச்சகம் (MOM) அறிவித்துள்ளது.

ஊழியர்கள் முடிந்தவரை தங்களது தங்கும் இடங்களிலேயே இருக்க வேண்டும், என்றும் MOM குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : “சிங்கப்பூரில் உங்களின் கடின உழைப்பிற்கு நன்றி ” – தமிழ் புத்தாண்டு வாழ்த்து கூறிய அமைச்சர் ஜோசபின் தியோ..!

ஊழியர்களுக்கான சம்பளம் சரியான நேரத்தில் வழங்கப்படுவது முக்கியம் என்றும், மேலும் அவர்களின் நலனை உறுதிப்படுத்துவதும், முதலாளிகளுக்கு முக்கியம் என MOM வலியுறுத்தியுள்ளது.

பொறுப்பற்ற முறையில் விதிகளை மீறும் ஊழியர்களுக்கும், முதலாளிகளுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று MOM எச்சரிக்கை செய்துள்ளது.

குறிப்பாக ஊழியர்களின் வேலை அனுமதி ரத்து செய்யப்படுவதும் அந்த மீறல் நடவடிக்கைகளில் அடங்கும் என்று செய்தி குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : COVID-19: விதிமுறைகளை மீறியதற்காக மொத்தம் 24 பேரின் வேலை அனுமதி ரத்து..!

#coronavirusSingapore #coronavirusnews #coronavirusupdateinSingapore #Tamilnews #coronavirusupdate #coronavirusSingaporecases #coronavirusinSingapore #SingaporeLatestTamilnews #சிங்கப்பூர்தமிழ்செய்திகள் #Singaporetamil