“சிங்கப்பூரில் உங்களின் கடின உழைப்பிற்கு நன்றி ” – தமிழ் புத்தாண்டு வாழ்த்து கூறிய அமைச்சர் ஜோசபின் தியோ..!

'Thank you for all your hard work': Josephine Teo thanks Singapore's foreign workers in Tamil New Year greetings
'Thank you for all your hard work': Josephine Teo thanks Singapore's foreign workers in Tamil New Year greetings (Photo: AFP/Roslan Rahman)

மனிதவள அமைச்சர் ஜோசபின் தியோ, சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களின் கடின உழைப்பிற்கும், COVID-19 பரவல் தடுப்பு போராட்டத்தில் அவர்களின் ஒத்துழைப்புக்கும் நன்றியை (ஏப்ரல் 14) தெரிவித்துள்ளார்.

காணொளி ஒன்றில், திருமதி தியோ தனது தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை சிங்கப்பூரில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு தெரிவித்துள்ளார், மேலும் அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் வாழவும் வாழ்த்தினார்.

இதையும் படிங்க : COVID-19: விதிமுறைகளை மீறியதற்காக மொத்தம் 24 பேரின் வேலை அனுமதி ரத்து..!

இன்று புதிய ஆண்டின் தொடக்கமாகும், ஆனால் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் இல்லாமல் கொண்டாடுவது கடினம் தான் என்று காணொளியில் திருமதி தியோ குறிப்பிட்டுள்ளார்.

இந்த COVID-19 காரணமாக அனைவரும் சிரமத்தை சந்தித்து வருகிறோம், ஆனால் இது உங்களுக்கு (வெளிநாட்டு ஊழியர்களுக்கு) மிகவும் கடினம் என்று எனக்குத் தெரியும். சிங்கப்பூரில் உங்களின் கடின உழைப்பிற்கும், இந்த இக்கட்டான காலகட்டத்தில் உங்கள் ஒத்துழைப்புக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன், என்றார்.

அனைத்து சிங்கப்பூரர்கள் சார்பாக, புதிய ஆண்டில் உங்களுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்க வேண்டும் என்று தாம் விரும்புவதாகவும் அவர் கூறினார்.

மேலும், உங்கள் குடும்பங்கள் மற்றும் நண்பர்களுக்காக ஊழியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் ஆக அதிகமாக ஒரே நாளில் புதிதாக 386 பேர் பாதிப்பு..!

#coronavirusSingapore #coronavirusnews #coronavirusupdateinSingapore #Tamilnews #coronavirusupdate #coronavirusSingaporecases #coronavirusinSingapore #SingaporeLatestTamilnews #சிங்கப்பூர்தமிழ்செய்திகள் #Singaporetamil