COVID-19: சிங்கப்பூரில் ஆக அதிகமாக ஒரே நாளில் புதிதாக 386 பேர் பாதிப்பு..!

Singapore reports record 386 new COVID-19 cases
Singapore reports record 386 new COVID-19 cases

சிங்கப்பூரில் புதிதாக 386 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று (ஏப்ரல் 13) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

இதுவரை சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 2,918ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க : COVID-19: குணமடைந்த நோயாளிகளிடம் இருந்து இரத்தம் பெற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை..!

குணமடைந்தோர்

மேலும், அன்றைய நிலவரப்படி மருத்துவமனையிலிருந்து மேலும் 26 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று MOH தெரிவித்துள்ளது.

தற்போது வரை மருத்துவமனையிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 586ஆக உள்ளது.

மருத்துவமனையில் உள்ளோர்

மருத்துவமனையில் இன்னும் 1,158 உறுதிப்படுத்தப்பட்ட நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று MOH குறிப்பிட்டுள்ளது.

மருத்துவமனையில் உள்ள பெரும்பாலானோரின் உடல்நிலை சீராகவோ அல்லது மேம்பட்டோ வருகிறது.

மேலும், 29 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர் என்றும் MOH குறிப்பிட்டுள்ளது.

1,165 நபர்கள் மருத்துவ ரீதியாக நன்றாக உள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : “நமது ஆகப் பெரிய தெற்காசிய சமூகம், தமிழர் சமூகம்” – பிரதமர் லீ தமிழ் புத்தாண்டு வாழ்த்து..!

புதிய சம்பவங்கள்

280 நபர்களுக்கு முன்பு அறியப்பட்ட குழுக்களுடன் தொடர்பு உள்ளது, அவர்களில் பெரும்பாலோர் தங்கும் விடுதிகளில் உள்ள வேலை அனுமதி பெற்றவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

12 பேர் முந்தைய பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்.

மீதமுள்ள 94 பேருக்கு முந்தைய சம்பவங்களுடன் எந்த தொடர்பும் இல்லை, தொடர்பு கண்டறிதல் நிலுவையில் உள்ளதாக MOH குறிப்பிட்டுள்ளது. இவர்களில் 21 பேர் சிங்கப்பூர் குடிமக்கள் அல்லது நிரந்தரவாசிகள், 5 பேர் S Pass வைத்திருப்பவர்கள், 64 பேர் வேலை அனுமதி பெற்றவர்கள், மீதமுள்ளவர்கள் நீண்ட கால அனுமதி வைத்திருப்பவர்கள்.

இதில் வெளிநாடுகளில் இருந்து வந்த சம்பவங்கள் எதுவும் இல்லை என்றும் MOH கூறியுள்ளது.

இதையும் படிங்க : COVID-19: 10 சிங்கப்பூரர்களில் ஒன்பது பேருக்கு தலா $600 செலுத்தப்படும்..!