விபத்தில் சிக்கிய மகனின் மருத்துவ கட்டணத்தை செலுத்த முடியாமல் கலங்கிய தயார்… S$233,000 மேல் அள்ளிக்கொடுத்த நல்லுள்ளங்கள்!

Gambas Ave accident victim fund raised
Give.asia/Sarah Widjaya

விபத்தில் சிக்கிய தனது மகனின் மருத்துவக் கட்டணத்தைச் செலுத்த முடியாமல் தவித்த தயார் தனது கவலையைப் பகிர்ந்து கொண்டார்.

அதன் பின்னர், முகமது அலிஃப் ரைகல் ஷாவின் தாயார் சித்தி சாரா ரஹீம் தொடங்கிய நிதி திரட்டும் முயற்சிக்கு சுமார் 1,800 க்கும் மேற்பட்ட நன்கொடையாளர்கள் நிதியளிக்க முன்வந்துள்ளனர்.

வேலை முடிந்து பேருந்துக்காகக் காத்திருந்த பெண் ஊழியர்… திடீரென காயத்துடன் கீழே விழுந்த அதிர்ச்சி – என்ன நடந்தது குழப்பத்தில் புலம்பும் குடும்பம்

கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 10) காம்பாஸ் அவென்யூவில் 20 வயதான அலிஃப் விபத்தில் சிக்கினார். அதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்தார்.

அலிஃப்பின் தாயார் சாரா, S$100,000 இலக்குடன் தனது மகனுக்காக Give.asia இல் நிதி திரட்டும் ஏற்பாட்டை கடந்த வியாழக்கிழமை தொடங்கினார்.

அது ஒரு நாளுக்குள் அதன் இலக்கை எட்டியது, தற்போது வரை மொத்தம் S$233,763 நிதி திரட்டப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் சிக்கிய அலிஃப், கடுமையான உட்புற இரத்தப்போக்கு மற்றும் இடது இடுப்பு முறிவுக்கு ஆளானார்.

அதோடு மட்டுமல்லாமல், விலா எலும்புகள் மற்றும் மணிக்கட்டு உடைந்தும், அவரது இடது முழங்கையில் துளை, பல காயங்கள் மற்றும் கிழிந்த உதடுகள் உட்பட பல காயங்களுக்கும் அவர் ஆளானார்.

உயிரிழந்தவரின் விவரம்

கருவில் இருக்கும் தன் பிள்ளைக்காக அதிக நேரம் வேலை செய்த ஊழியர்… தன் குழந்தையை பார்க்காமலே சென்ற சோகம் – கண்ணீரில் குடும்பம்

2 மோட்டார் சைக்கிள்கள், வேன் சம்பந்தப்பட்ட விபத்து: 3 மாத கர்ப்பிணி மனைவியை விட்டு பரிதாபமாக உயிரிழந்த ஆடவர்!

“நான் இனி பயணிக்க விரும்பவில்லை … ஒருவேளை மற்றொரு தொற்றுநோய் அபாயம் ஏற்படலாம்” அஞ்சி நடுங்கும் வெளிநாட்டு ஊழியர்கள்!