கிறிஸ்துமஸை முன்னிட்டு S$50,000 மதிப்புள்ள அன்பளிப்பு பைகள்!

Hong Kah North helping
(PHOTO: Amy Khor/FB)

ஹோங் கா நார்த் (Hong Kah North) பகுதியை சேர்ந்த வசதி குறைவான குடும்பங்களுக்கு S$50,000 மதிப்புள்ள அன்பளிப்புப் பைகள் வழங்கப்பட்டன.

வாடகை வீடுகளில் வசிக்கும் 900க்கும் மேற்பட்ட குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உணவு, வீட்டு பொருட்கள் மற்றும் சூப்பர்மார்க்கெட் வவுச்சர்களைக் கொண்ட பண்டிகை சிறப்பு பைகள் வழங்கப்பட்டுள்ளன.

உணவில் கரப்பான் பூச்சி… சிங்கப்பூர் உணவு அமைப்பு நடவடிக்கை!

COVID-19 தொற்றுநோய் காரணமாக குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக அவர்களின் வேலைகள் மற்றும் வருமானத்தைப் அது கடுமையாக பாதித்துள்ளது.

(PHOTO: Amy Khor/FB)

அவர்களுக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் ஆதரவு அடித்தள அமைப்புகள் மேற்கொள்ளும் முயற்சிகளின் இது ஒரு பகுதியாக அமைந்துள்ளது.

இந்த அன்பளிப்பு பைகளை நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சின் மூத்த துணையமைச்சர் டாக்டர் ஏமி கோர் (Amy Khor) வழங்கினார்.

சிங்கப்பூரில் வேலை செய்து வரும் Work pass, Work permit வைத்திருப்பவர்களுக்கு புதிதாக தொற்று!

இத்தகைய திட்டங்களின் மூலம், குடியிருப்பாளர்களிடையே தன்னார்வத்தின் உணர்வை வளர்க்க விரும்புவதாகவும், அது மூலம் சமூகத்தில் வசதி குறைந்தவர்களுக்கு அதிக உதவிகளைச் செய்ய முடியும் என்றும் டாக்டர் கோர் குறிப்பிட்டார்.

(PHOTO: Amy Khor/FB)

வரும் ஆண்டில், வாய்ப்புகள் மற்றும் சவால்களை எதிர்கொள்ளவும், வலுவான மற்றும் ஒன்றுபட்ட சமூகத்தை உருவாக்கவும் அது உதவும் என்றும் கூறினார்.

இறுதியாக அனைவருக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் 2021 சிறப்பாக அமைய வாழ்த்துக்களையும் அவர் கூறினார்.

(PHOTO: Amy Khor/FB)

திருச்சி-சிங்கப்பூர் இருவழி செல்லும் பயணிகளுக்கு தினசரி விமானங்கள்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…