COVID-19: வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை மீறி செய்தித்தாள் வழங்க சென்றவர் மீது குற்றச்சாட்டு..!

Man charged with breaching COVID-19 stay-home notice to deliver newspapers
Man charged with breaching COVID-19 stay-home notice to deliver newspapers

வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை மீறியதற்காக சமீபத்திய விதிமுறைகளின் கீழ் ஒருவர் (ஏப்ரல் 7) குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

குற்றப்பத்திரிகையின் படி, 48 வயதான பழனிவேலு ராமசாமி என்ற நபருக்கு கடந்த மார்ச் 21ஆம் தேதி குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணைய அதிகாரிகளால் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவு வழங்கப்பட்டது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் இன்று முதல் பெரும்பாலான வேலையிடங்கள் மூடல்..!

குற்றம் சாட்டப்பட்ட பழனிவேலு தனது பிளாக் 105 டவுனர் ரோடு பிளாட்டை விட்டு, கடந்த மார்ச் 30 அன்று காரணமின்றி வெளியே சென்றுள்ளார்.

செய்தித்தாள்களை வழங்க, கோல்ட்ஹில் பிளாசாவுக்கு (Goldhill Plaza) செல்ல பொது போக்குவரத்தைப் பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த கட்டாய உத்தரவு நடப்புக்கு வந்தபின் அதை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டது இதுவே முதல் முறை.

இந்த உத்தரவை மீறிய அவருக்கு 6 மாதம் வரையிலான சிறைத்தண்டனை, S$10,000 வரையிலான அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் 15,000 கிலோ உணவை நன்கொடையாக வழங்கிய மெரினா பே சாண்ட்ஸ்..!