தங்கும் விடுதியைவிட்டு வெளியேறி விமான நிலையத்திற்கு சென்ற இந்திய ஊழியர் மீது குற்றச்சாட்டு!

foreign workers dorm almost full need accommodation prrof sep19
(Photo by ROSLAN RAHMAN / AFP)

சிங்கப்பூரின் அதிரடி திட்டம் நடப்பில் இருந்தபோது, ​​கொரோனா தொற்று சோதனைக்கு வந்த வெளிநாட்டு ஊழியர் ஒருவர், சிங்கப்பூர் பொது மருத்துவமனையை விட்டு வெளியேறியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அந்த மருத்துவமனையில் அவர் தனது கொரோனா சோதனையின் முடிவுக்காக காத்திருந்ததாகவும், பின்னர் டியோங் பஹ்ருவை (Tiong Bahru) நோக்கி நடந்து சென்று லோயர் டெல்டா சாலைக்கு (Lower Delta Road) பொது பேருந்தில் சென்றதாகவும் கூறப்படுகிறது.

தனிமைப்படுத்தல் விண்ணப்பங்களில் தவறான தகவல்களை அளித்த 8 பேரிடம் விசாரணை

பின்னர் அங்கிருந்து, அவர் சாங்கி விமான நிலைய முனையம் 1க்கு ஒரு டாக்ஸியில் ஏறியதாகக் கூறப்படுகிறது. அங்கு அவர் விமான நிலைய ஊழியர்களிடம் பேசிக்கொன்டு இருந்ததாகவும், மேலும் சுமார் நான்கு மணி நேரம் சுற்றி திரிந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்தியர்

இதில் 25 வயதான இந்திய நாட்டை சேர்ந்த பார்த்திபன் பாலச்சந்திரன் என்பவருக்கு, தொற்று நோய்கள் சட்டத்தின் கீழ் மூன்று எண்ணிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குற்றப்பத்திரிகைகளின்படி, COVID-19 நோயாளிகளுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் பார்த்திபன், கடந்த ஜூன் 16 அன்று ஜுராங் பெஞ்சுரு தங்கும் விடுதி 1ஐ விட்டு டாக்ஸி மூலம் சாங்கி விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.

அந்த தங்கும் விடுதி, COVID-19 தொற்று பாதிப்பு காரணமாக தனிமைப்படுத்தும் பகுதியாக அறிவிப்பு செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

விமான டிக்கெட்

மேலும், அவர் விமான நிலையத்தில், இந்தியாவுக்கு விமான டிக்கெட் வாங்குவது குறித்து ஊழியர்களிடம் பேசினார் என்றும், அங்கேயே தூங்கினார் என்றும் குற்றப்பத்திரிகை விவரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், அவர் தனது உறவினர்களில் ஒருவருக்கு சொந்தமான ஒரு பிளாட்டுக்கு செல்ல தெம்பனீஸ்க்கு பயணம் செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சட்டம்

குற்றம் நிரூபிக்கப்பட்டால், தொற்று நோய்கள் சட்டத்தை மீறியதற்காக அவருக்கு S$10,000 வரை அபராதம், ஆறு மாத சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

லட்சுமி விலாஸ் வங்கியை DBS வங்கியுடன் இணைக்கத் திட்டம்

சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வெளிநாட்டவர் இருவர் கைது

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…