ஜூரோங் தங்குவிடுதியின் ஆய்விற்கு பின் மனிதவள அமைச்சு அதிரடி நடவடிக்கை!

Pic: Nuria Ling/TODAY

ஜூரோங்கில் புதிதாக கட்டப்பட்டுள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கான வெஸ்ட்லைட் ஜாலான் துக்காங் தங்குவிடுதியில் சிறிது காலமாகவே பல்வேறு குழப்பங்கள் மற்றும் பிரச்சினைகள் ஏற்பட்டது.

மனிதவள அமைச்சின் முக்கிய அதிகாரிகள் ஜாலான் துக்காங் தங்குவிடுதியை ஆய்வு செய்து அங்கு வசிக்கும் ஊழியர்கள் & நிர்வாகத்தினரிடம் கலந்துரையாடினர்.

ஜூரோங் புதிய தங்குவிடுதியில் மருத்துவ வசதி பற்றாக்குறை!

இதன் விளைவாக தற்போது ஜாலான் துக்காங் தங்குவிடுதியில் வசிக்கும் ஊழியர்களுக்கு கோவிட்- 19 தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 55% வெளிநாட்டு ஊழியர்களுக்கு கோவிட்- 19 தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மீதம் உள்ள 45% வெளிநாட்டு ஊழியர்களுக்கு கோவிட்- 19 பரவியுள்ளதா அல்லது அவர்கள் ஏற்கனவே தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களா என்ற கணக்கெடுப்பு நடைப்பெற்று வருகிறது.

கணக்கெடுப்பு சரிசெய்த பிறகு மீதம் உள்ளவர்களுக்கும் கோவிட்- 19 தடுப்பூசி முறையாக போடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஊழியர்களுக்கு சரியாக தடுப்பூசி போடப்படுகிறது என்பதை விடுதியின் நிர்வாகம் உறுதி செய்துள்ளதாக மனிதவள அமைச்சு தற்போது வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள கண்டிப்பாக வாய்ப்பு வழங்கப்படும் என்றும், தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்கும் இவ்வாய்ப்பு கட்டாயம் வழங்கப்படும் என மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் தங்குவிடுதியில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு முறையாக தடுப்பூசி போடப்படுகிறதா என்று அவர்களின் முதலாளிகளுடன் சேர்ந்து மனிதவள அமைச்சும் இனி செயல்படும் என் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூருக்கு வரும் வெளிநாட்டு ஊழியர்கள் ஏற்கனவே மற்ற நாடுகளில் தடுப்பூசி போட்டுக் கொண்டார்களா, இல்லையா என்ற விபரம் கண்டறியப்படும்.

மேலும் வெளிநாட்டு ஊழியர்கள் ஏற்கனவே தடுப்பூசி போட்டிருந்தால் அதற்கான சான்றிதழ் சமர்பிக்க வேண்டியது அவசியம்.

வெளிநாட்டு ஊழியர்கள் முறையாக உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்த பைசர் – பயோஎன்டெக், காெமிர்னாட்டி போன்ற தடுப்பூசி போட்டுக் கொண்ட பின் 14 நாட்கள் கழித்தே, அவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் என்று தேசிய நோய் தடுப்பாற்றல் பட்டியலில் இடம்பெறுவர்.

மேலும், விடுதியில் தங்கியுள்ள தொற்று ஏற்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் குணமடைய சுகாதார பராமரிப்பு பல்வேறு மாற்றங்களையும், புதிய விதிமுறைகளையும் அமலுக்கு கொண்டு வந்துள்ளது.

இந்த புதிய மாற்றங்களும், விதிமுறைகளும் விடுதியில வசிப்போருக்கு உதவியாக இருந்தாலும், கூடவே சில இடையூறுகள் இருப்பதாகவும் அறியப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் 19 வயது மாணவர் உயரத்தில் இருந்து கீழே விழுந்து மரணம்