சிங்கப்பூரில் அனுமதி இல்லாத பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட வெளிநாட்டவர் 4 பேரிடம் விசாரணை..!

Police investigating 4 Myanmar nationals for taking part in public assembly without permit
(Photo: Google Maps)

காவல்துறை அனுமதி இல்லாமல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றதற்காக நான்கு மியான்மர் நாட்டை சேர்ந்தவர்களை காவல்துறை விசாரித்து வருகின்றனர் என்று சிங்கப்பூர் போலீஸ் படை (SPF) தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தாகூர் தொழில்துறை பூங்கா (Tagore Industrial Park) அருகே நடந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மீறிய 10 உணவகங்களுக்கு அபராதம்..!

அந்த நான்கு மியான்மர் ஆடவரும், ஒரு மியான்மர் அரசியல் கட்சிக்கு ஆதரவாக ஒரு பொதுக்கூட்டத்தில் பங்கேற்றனர் என்று காவல்துறையினர் கட்சியின் பெயரை குறிப்பிடாமல் தெரிவித்தனர்.

நேற்று ஆகஸ்ட் 27ம் தேதி பதிவு செய்யப்பட்ட புகாரின் பிரதிபலிப்பாக இந்த விசாரணை நடந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளனர்.

சிங்கப்பூருக்கு வருகை தரும், பணிபுரியும் அல்லது வசிக்கும் வெளிநாட்டினர், தங்கள் அரசியல் கொள்கைகளை மேம்படுத்துவதற்குச் சிங்கப்பூரை ஒரு தளமாக பயன்படுத்தக்கூடாது என்பதை காவல்துறை நினைவுபடுத்த விரும்புகிறது என்று SPF தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : CECA உடன்பாடு இந்திய ஊழியர்களுக்கு சிங்கப்பூரில் உடனடி குடியுரிமை அல்லது PR வழங்காது: MTI விளக்கம்..!

சிங்கப்பூரின் சட்டங்களுக்கு வெளிநாட்டவர்களும் கட்டுப்பட வேண்டும் என்று SPF கேட்டுக்கொண்டுள்ளது.

காவல்துறை அனுமதியின்றி பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்வது அல்லது அதில் கலந்துகொள்வது சட்டவிரோதமான செயல் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டவிரோத பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்யும் அல்லது பங்கேற்கும் எந்தவொரு நபருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் SPF எச்சரித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் EP அனுமதி, S Pass அனுமதிக்கான குறைந்தபட்ச சம்பள உயர்வு விவரங்கள்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg