பல்வேறு மோசடிகள் தொடர்பில் 336 பேர் விசாரணை – காவல்துறை!

Police investigating 336 alleged scammers
Police investigating 336 alleged scammers

சிங்கப்பூரில் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதன் தொடர்பில் 336 பேரை காவல்துறை விசாரித்து வருகிறது.

இந்த மோசடிகளில் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் S$4 மில்லியனுக்கும் அதிகமான தொகையை இழந்ததாகக் காவல்துறை அறிக்கை கூறுகிறது.

பயங்கர ஆயுதங்களுடன் கலவரத்தில் ஈடுபட்டதாக 5 பேர் கைது!

டிசம்பர் 5 முதல் டிசம்பர் 19 வரை இரண்டு வாரம், வணிக விவகாரத் துறை அதிகாரிகள் மற்றும் ஏழு காவல் தரைப் பிரிவு அதிகாரிகளால் தீவு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட அமலாக்க நடவடிக்கையைத் தொடர்ந்து அவர்கள் சிக்கினர்.

இதில் 15 முதல் 76 வயதுக்குட்பட்ட 221 ஆண்கள் மற்றும் 115 பெண்கள் 641 மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதில் முக்கியமாகவை, இணைய காதல், ஈ-காமர்ஸ் மற்றும் முதலீட்டு மோசடிகள், அத்துடன் போலி சூதாட்ட தளம் மற்றும் கடன் மோசடிகள் ஆகியவையும் அடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மோசடி அல்லது பணமோசடி குற்றத்திற்காக காவல்துறையினர் தனிநபர்களை விசாரித்து வருகின்றனர்.

இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் மோசடி செய்பவர்களால் அதிகமான மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.

அதாவது சுமார் 10,402 மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளன, மேலும் S$157 மில்லியன் ஏமாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தண்டனைச் சட்டத்தின் பிரிவு 420ன் கீழ், மோசடி குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் விதிக்கப்படலாம்.

திருச்சி-சிங்கப்பூர் இருவழி செல்லும் பயணிகளுக்கு தினசரி விமானங்கள்..!

3ஆம் கட்டத்தில், வெளிநாட்டு ஊழியருக்கான கட்டுப்பாடுகள் ஏன் தளர்த்தவில்லை ? – அமைச்சர் டான் விளக்கம்!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…