உணவு தட்டில் எலி நெளிந்த சம்பவம்: ஆய்வு செய்த அதிகாரிகள் – நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி

rat-orchard-road-food-court
Internet

Singapore Viral video: ஆர்ச்சட் ரோட்டில் இருக்கும் உணவகம் ஒன்றில், உணவு வைக்கும் தட்டில் எலி படுத்துக்கொண்டு நெளிந்து கொண்டிருக்கும் காணொளி இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அது குறித்து அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய சுற்றுச்சூழல் அமைப்பு (NEA) மற்றும் சிங்கப்பூர் உணவு அமைப்பு (SFA) ஆகியவை தெரிவித்துள்ளன.

இந்தியர்களுக்கு விசா தேவையில்லை.. சிங்கப்பூரில் இருந்து மலேசியா செல்லும் இந்தியர்களுக்கு விசா தேவையா?

“சம்பவத்தைப் பற்றி தகவல் அறிந்தவுடன், SFA மற்றும் NEA அதிகாரிகள் டாங்ஸ் மார்க்கெட்டில் இரண்டு முறை ஆய்வுகளை மேற்கொண்டனர்.”

மேலும் பொதுவான பகுதிகள் மற்றும் மேற்கூரை ஆகியவற்றில் பூச்சி மற்றும் எலி தொல்லை அறிகுறிகள் இருக்கிறதா என ஆய்வு செய்தனர்.

அப்போது மேற்கூரை பகுதிகளில் எலி தொல்லை அறிகுறி இருந்ததாகவும், இதனால் டாங் பிளாசா கட்டிட நிர்வாகத்திற்கு எதிராக NEA அமலாக்க நடவடிக்கை எடுக்கும் எனவும் கூறியுள்ளது.

அதே போல, சுகாதார குறைபாடுகள் காணப்பட்ட ஐந்து உணவு கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் SFA கூறியுள்ளது.

Singapore Viral video: உணவு தட்டில் உயிருடன் படுத்து நெளிந்த எலி.. உணவகத்தில் அலறிய பொதுமக்கள் (Video)

சிங்கப்பூரில் இந்தியருக்கு சிறை.. சாதாரண வாக்குவாதம் மரணத்தில் முடிந்த விபரீதம்