சிங்கப்பூருக்கு கட்டுமான வேலைக்காக வரலாமா?… ஊழியர்கள் படும்பாடு என்ன? சொல்ல மறந்த கதை!

foreign construction-worker-death
Photo: Construction Plus Asia

பொதுவாக அதிகமான தமிழ் ஊழியர்கள் வெளிநாடுகளில் கட்டுமான துறைகளில் வேலை செய்கின்றனர். குறிப்பாக சிங்கப்பூரில் அதிகம் என்றே கூறலாம்.

சிங்கப்பூருக்கு கட்டுமான வேலைக்காக செல்லலாமா என்ற கேள்விக்கு 10 வருடங்களுக்கு மேலாக கட்டுமானத் துறையில் பணிபுரிந்த ஊழியர் ராஜ் என்பவர் பதில் கூறியுள்ளார்.

“சிங்கப்பூரில் வேலை ரெடி… டிக்கெட்டை போடுங்க” ஏமாந்த 100 பேர் – தமிழக இளைஞர்கள் கண்ணீர்

அவர் கூறுகையில்; கட்டுமான வேலைக்கு தாராளமாக வரலாம் என்கிறார். குறிப்பாக அவர் சொல்ல கூடிய செய்தி, “உங்களுக்கு மனத்திடம் அதிகம் இருந்து பணம் மட்டும் குறிக்கோளாக பார்ப்பீர்கள் என்றால்? தாராளமாக வரலாம்.”

ஏன் இதை அவர் குறிப்பிடுகிறார் என்றால், “ஆசையாய் பல எதிர்பார்ப்புகளுடன் மனக்கோட்டை கட்டி வேலைக்கு வரும் உங்களுக்கு இங்கே பல தடைகள் ஏற்படும், கனவுகள் சுக்குநூறாக உடைப்படும்” என்றார்.

கார் முன்னே விசித்திரமாக நடந்துகொண்ட பெண்… நம்பர் பிளேட்டை உடைத்து எறிந்து அட்டகாசம்; வீடியோ வைரல்

அதையும் தாண்டி, நீங்கள் உங்கள் வாழ்வில் முன்னேறுவீர்களா? அல்லது இயலாமல் போகுமா? என்பது உங்களிடம் நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி.

அதாவது வேலைக்கு வந்த முதல் நாளே உங்கள் கனவுகள் உடைக்கப்பட்டு, மன அழுத்தம் ஏற்பட தொடங்கும் என்றும் கூறுகிறார் ராஜ்.

ஆம், தங்கும் விடுதியில் நீங்கள் வாழ்வது என்பது சாதாரணம் அல்ல. ஒரே விடுதியில் குறைந்தது 300 ஊழியர்களில் தொடங்கி 30,000 வரை தங்கும் நிலை ஏற்படும். சில விடுதிகளில் இந்த எண்ணிக்கையை விட அதிகம் இருக்கும்.

நிம்மதியாக படுப்பது என்பதும் பலருக்கு கேள்வி குறியாகவே இருக்கும் என கூறுகிறார் அவர்.

உணவை நீங்கள் சமைத்து சாப்பிட உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் அது நீங்கள் செய்த புண்ணியம் என ஒரே வரியில் முடித்து கொண்டார் அவர்.

வேலைக்கு சென்ற முதல் நாள் அனைத்து பாதுகாப்பு கவசங்களையும் அணிந்து, ஏதோ போருக்கு செல்வது போல தயாராகி, இறுதியில் கொடுக்கப்படும் வேலை “ஜங்குவா ஆப்ரேட்டர்”… அதாவது மண் வெட்டும் வேலை. இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் என்கிறார் அவர்.

இத்தனை இன்னல்களையும் தாண்டி ஒரு ஊழியர் சம்பாரித்து தன் குடும்ப கஷ்டங்களை போக்கி, சொந்த நாட்டில் வீட்டை கட்டி முடித்து இருப்பாரே எனில் அவர் போற்றப்பட வேண்டியவர்.