5 பள்ளிவாசல்களில் வெள்ளிக்கிழமை தொழுகையில் கூடுதல் வாய்ப்பு!

5 mosques to offer 250 spaces each for Friday prayers from Dec 11
(Photo: AFP/Roslan Rahman)

சிங்கப்பூரில் வரும் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 11) முதல் 5 பள்ளிவாசல்களில் வாரந்தோறும் 250 பேர் தொழுகையில் கலந்துகொள்ள ஏற்பட்டு செய்யப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் (MUIS) பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த பள்ளிவாசல்களில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், ஒரு அமர்வுக்கு 50 பேர் என 5 பிரார்த்தனை கூட்டங்கள் இருக்கும்.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் தேவையான மாற்றம் – ஆய்வு!

தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து மசூதிகள்

  • பொங்கோல் மஸ்ஜித் அல்-இஸ்லா (Masjid Al-Islah)
  • பாசிர் ரிஸ் மஸ்ஜித் அல்-இஸ்தீஃபர் (Masjid Al-Istighfar)
  • தெம்பனீஸ் மஸ்ஜித் தாருல் குஃப்ரான் (Masjid Darul Ghufran)
  • அட்மிரால்ட்டியில் மஸ்ஜித் அஸ்யபா (Masjid Assyafaah)
  • சோவா சூ காங்கில் மஸ்ஜித் அல்-கைர் (Masjid Al-Khair)

இந்த நபர்களின் எண்ணைக்கையை அதிகரிப்பதன் மூலம், ஒவ்வொரு வாரமும் மொத்தம் 19,365 நபர்கள் மசூதிகளில் அதிகமாக தொழுகையை நிறைவேற்ற முடியும் என்று MUIS தெரிவித்துள்ளது.

பள்ளிவாசல்களுக்கு தொழுகைக்காக செல்லும் நபர்கள் TraceTogether கருவிகளை அல்லது செயலியைப் பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகின்றனர்.

முன்பதிவு செய்ய: ourmosques.commonspaces.sg அல்லது Muslim.sg

முன்பதிவை ரத்துச் செய்ய: ourmosques.commonspaces.sg/check-booking-confirmation

சிங்கப்பூர் ஜலான் சுல்தான் பகுதியில் சண்டை – 7 பேர் கைது

சிங்கப்பூரில் பணியாற்றிவந்த தமிழக ஊழியர் மரணம்!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…