சிங்கப்பூரில் அக். முதல் வரும் மாற்றங்கள்: வெளிநாட்டு ஊழியர்கள், வேலை, குற்றப்புள்ளிகள் – முழு தொகுப்பு

Singapore oct changes jobs workers electricity
Pic: Julio Etchart

சிங்கப்பூரில் இந்த அக்டோபர் மாதம் என்னென்ன மாற்றங்கள் வரவுள்ளது என்பதை இந்த தொகுப்பில் நாம் காண்போம்.

தேக்கா நிலையம்

லிட்டில் இந்தியாவில் உள்ள பிரபல தேக்கா நிலையம் கடந்த ஜூலை 3 ஆம் தேதி முதல் மூடப்பட்டது.

புதுப்பிப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் 3 மாதங்களுக்கு அந்த மூடல் அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில், சமீபத்தில் தான் அதன் இரண்டாம் தளம் திறக்கப்பட்டது.

அதிக அளவில் படையெடுத்த வெளிநாட்டு ஊழியர்கள் – சட்டென்று எகிறிய சிங்கப்பூர் மக்கள்தொகை

மின்சாரக் கட்டணம்

சிங்கப்பூரில் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை மின்சாரக் கட்டணம் சராசரியாக 3.7 சதவீதம் உயரும் என்று SP குழுமம் தெரிவித்துள்ளது.

அதாவது சரக்கு மற்றும் சேவை வரி (GST) சேர்க்காமல் ஒரு கிலோவாட்க்கு (kWh) 0.98 சென்ட்கள் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படும்.

முழு விவரம்: சிங்கப்பூரில் உயரும் மின்சார கட்டணம் – நீங்கள் தங்கும் இடத்திற்கு கட்டணம் எவ்வளவு..? – தெரிந்துகொள்ளுங்கள்

அஞ்சல் கட்டணம்

அஞ்சல் சேவையைப் பராமரிப்பதற்கான செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், அக்டோபர் 9ம் தேதி முதல் உள்நாட்டு அஞ்சல் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது.

முழு விவரம்: அஞ்சல் கட்டணத்தை உயர்த்தப்படவிருப்பதாக ‘சிங்போஸ்ட்’ அறிவிப்பு!

சாங்கி விமான நிலையத்தின் முனையம் இரண்டு

சாங்கி விமான நிலையத்தின் முனையம் இரண்டு, அக்டோபர் மாதம் இறுதிக்குள் முழுமையாக திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் வடக்குப் பகுதியில் செயல்பாடுகள் சமீபத்தில் தான் தொடங்கிருப்பது குறிப்பிடத்தக்கது.

முழு விவரம்: சாங்கி ஏர்போர்ட் முனையம் 2 வடக்குப் பகுதி திறப்பு – தென்கிழக்கு ஆசியா நாடுகளுக்கு விமானங்கள் இங்கு தான்

வெளிநாட்டு ஊழியர்களுக்கு

வேலையிடப் பாதுகாப்புக்கு வழங்கப்படும் குற்றப் புள்ளிகள் நடைமுறை உற்பத்தித் துறைக்கும் விரிவுபடுத்தப்படும் என சொல்லப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக விதிகளை மீறும் நிறுவனங்கள் இரண்டு ஆண்டுகள் வரை வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்க முடியாது.

முழு விவரம்: வெளிநாட்டு ஊழியர்கள் இனி தைரியமாக இதை செய்யலாம் – புதிய இயக்கம் தொடக்கம்

சிங்கப்பூரில் கட்டுமானத்துறை ஊழியர்களின் உயிரிழப்பு அதிகம் – விழுந்து மரணித்தவர்களும் அதிகம்