சிங்கப்பூரில் களைகட்டிய தமிழர் திருநாள் பொங்கல் கொண்டாட்டம் – முழு தொகுப்பு..!

Pongal Festival in Singapore : உலகெங்கிலும் வசிக்கும் தமிழர்கள் தை மாதத்தில் அந்தந்த பகுதிகளில் ஒன்று கூடி தை பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்கின்றனர்.

சிங்கப்பூரில் பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் பாரம்பரியம் மாறாமல் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. அதே போல் இந்த ஆண்டும் வழக்கமான உற்சாகத்துடன் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் பிரதமர் லீ கலந்துகொண்ட தமிழர் திருநாள் பொங்கல் கொண்டாட்டம்..!

தமிழர்களின் பொங்கல் திருநாளில், “பொங்கலோ பொங்கல்!” என்ற ஓசையுடன் புக்கிட் பஞ்சாங் குடியிருப்பாளர்கள் ஒன்றிணைந்து கோலாகலமாக கொண்டாடினர்.

மேலும், பொங்கோல் சமூக மன்ற இந்திய செயற்பாட்டுக் குழுவால் இந்த திருநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஹவ்காங் பகுதியில் உள்ள பொங்கோல் சமூக மன்றத்தில் ஒயிலாட்டம், கோலாட்டம், சிலம்பாட்டம் என களைகட்டியது.

பொங்கல் விழா – 2020 Pongal -2020 சிலம்பம்Tamil's Traditional Silambam பொங்கோல் சமூக மன்றம்.

Posted by Jothibharathi Ramalingam on Sunday, January 19, 2020

இதையும் படிங்க : தமிழர் திருநாள் வாழ்த்துக்களை கூறிய அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன்..!

குறிப்பாக தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகளுடன் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதே போல உற்சாகத்துடன் கிராமிய நடனங்கள் பாரம்பரிய விளையாட்டுக்களுடன் சிங்கப்பூரில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது.

பொங்கல் விழா – 2020 Pongal -2020 ஒயிலாட்டம்Tamil's Traditional Oyilattam பொங்கோல் சமூக மன்றம்.

Posted by Jothibharathi Ramalingam on Sunday, January 19, 2020

மேலும், தமிழர்களின் திருநாளான பொங்கலுக்கு, சிங்கப்பூர் பொங்கல் என்ற பாடல் வெளியானது. இந்த பாடலை விஜய் டிவியின் புகழ் செந்தில்கணேஷ் & ராஜலட்சுமி தம்பதியினர் பாடி உள்ளனர்.

இதையும் படிங்க : சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் தமிழர் திருநாள் கொண்டாட்டம்…!

புகைப்படங்கள்: