தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கான பயண ஏற்பாட்டில் யார் யார் தகுதி பெறுவர்?

Photo: Reuters

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கான சிறப்பு திட்டத்தில் யார் யார் தகுதியானவர் என இந்த பதிவில் காண்போம்.

நீங்கள் இதற்காக உற்சாகமடைவதற்கு முன், அந்த திட்டத்தில் பயன்பெற தனிநபர்கள் பல நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

சிங்கப்பூரில் தொற்றால் மேலும் 9 பேர் உயிரிழப்பு

முழுமையாக தடுப்பூசி போட வேண்டும்

உலக சுகாதார அமைப்பின் (WHO) அவசர பயன்பாட்டுப் பட்டியலில் (EUL) உள்ள ஏதேனும் தடுப்பூசியை முழுமையாக போட்டுக்கொண்ட பயணிகள் மட்டுமே, அந்த சிறப்பு பயணத்திற்கு தகுதி பெறுவர்.

சிங்கப்பூரில் நீங்கள் தடுப்பூசி போட்டிருந்தால், நீங்கள் தகுதியுடையவர் என்பதை உறுதி செய்யலாம், உள்நாட்டில் வழங்கப்படும் அனைத்து தடுப்பூசிகளும் அந்த EUL பட்டியலில் உள்ளன.

 

ICA

சிறப்பு விமானத்தில் பயணிக்க வேண்டும்

வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை தவிர்க்க, நீங்கள் அதற்காக நியமிக்கப்பட்ட விமானத்தில் சிங்கப்பூருக்கு வர வேண்டும்.

அந்த திட்டத்தில் உள்ள அனைத்து இடங்களுக்கும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) சேவை வழங்குகிறது.

தகுதிவாய்ந்த விமானங்களின் முழு பட்டியலை இங்கே காணலாம்.

14 நாள் பயண வரலாறு

அதற்கு தகுதிபெற, கடந்த 14 நாள் மேற்கொண்ட பயணத்தில், சிங்கப்பூர் அல்லது நடைமுறையில் உள்ள தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கான சிறப்பு திட்டத்தில் உள்ள நாடுகள் மட்டுமே இருக்க வேண்டும்.

ஸ்வாப் சோதனைகள்

அந்த திட்டத்தின் மூலம் சிங்கப்பூர் வரும் நீங்கள் இரண்டு PCR சோதனைகளை எடுக்க வேண்டும்.

நீங்கள் சிங்கப்பூர் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன் எடுக்கப்பட்ட PCR சோதனை நெகடிவ் முடிவை சமர்ப்பிக்க வேண்டும்.

சிங்கப்பூர் வந்தவுடன், நீங்கள் மற்றொரு PCR சோதனை எடுக்க வேண்டும்.

மேலும், நெகடிவ் முடிவு வரும் வரை சுயமாக தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

வெளிநாட்டினர் Vaccinated Travel Passக்கு விண்ணப்பிக்க வேண்டும்

நீங்கள் சிங்கப்பூரர் அல்லது நிரந்தரவாசி (PR) இல்லை என்றால், நீங்கள் Vaccinated Travel Passக்கு (VTP) விண்ணப்பிக்க வேண்டும்.

சிங்கப்பூருக்குள் நுழைவதற்கு ஏழு முதல் 30 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்.

இதற்காக எவ்வாறு விண்ணப்பிப்பது என்பது பற்றிய கூடுதல் விவரங்களை இங்கே காணலாம்.

மேலும் விவரங்கள்: தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் சிங்கப்பூர் வரலாம்.. மேலும் எட்டு நாடுகளுக்கு திட்டம் விரிவு

இனி இந்த நாட்டிற்குச் செல்ல கட்டுப்பாடுகள் கிடையாது!