சுவிட்ஸர்லாந்து மலையில் சிங்கப்பூர் கொடி – “பல்வேறு இனத்தவர்கள் ஒன்றாக நிம்மதியாக வாழும் நாடு” என்று புகழாரம்..!

Singapore's flag projected on the Swiss Alps Matterhorn in solidarity
Singapore's flag projected on the Swiss Alps Matterhorn in solidarity (Photo: Switzerland Tourism/Facebook)

COVID-19 தாக்கம் காரணமாக பல உலகநாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டு, அதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டும் வருகின்றனர்.

சுவிட்ஸர்லாந்து அதன் ஆல்ப்ஸ் மலையில் உலக நாடுகளின் கொடிகளை COVID-19 தொற்றிலிருந்து மீண்டு வரவும், ஆறுதல் அளிக்கும் வகையிலும் ஒளிவடிவில் காட்சிப்படுத்தி வருகிறது.

இதையும் படிங்க : COVID -19: சிங்கப்பூரில் தொலைபேசி வழியாக மனோவியல் ரீதியான ஆதரவு..!

இந்நிலையில், சிங்கப்பூரின் கொடியையும் சுவிட்ஸர்லாந்து ஆல்ப்ஸ் மலையில் காட்சிப்படுத்தி உள்ளது.

In the city-state Singapore, different ethnic groups live together peacefully. The country is well organized and clean:…

Posted by Switzerland. on Thursday, April 23, 2020

 

சிங்கப்பூரில், பல்வேறு இனத்தவர்கள் ஒன்றாக நிம்மதியாக வாழ்கின்றனர் என்றும், மேலும் சிங்கப்பூர் நன்கு ஒழுங்கமைக்கப்பட்டு சுத்தமாக உள்ளது என்றும் சுவிட்ஸர்லாந்து தன் முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இதே போன்ற பண்புகள் சுவிட்சர்லாந்திற்கும் இருப்பதாகவும், சிங்கப்பூர் மக்களுடன் ஒற்றுமையைக் வெளிக்காட்டுவதாகவும், நம்பிக்கையின் அடையாளத்தை அனுப்புவதாகவும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா, ஜப்பான், பிரிட்டன், அமெரிக்கா, ஜெர்மனி போன்ற பல நாடுகளின் கொடிகளும் அங்கு காட்சிப்படுத்தப்பட்டன.

இதையும் படிங்கசிங்கப்பூரில் புதிதாக 897 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!