பாதுகாப்பு இடைவெளி நடவடிக்கைகளை மீறி ஒன்றுகூடிய 15 பேரிடம் காவல்துறை விசாரணை

spf-officer-dies-facebook-post
File Photo Via The Singapore Police Force

செராங்கூன் கார்டன் வேயில் உள்ள பப்பில், பாதுகாப்பு இடைவெளி நடவடிக்கைகளை மீறி ஒன்றுகூடியதாக, 21 முதல் 30 வயதுக்குட்பட்ட 15 பேரிடம் காவல்துறை விசாரணை நடத்தியது.

அவர்களில் 13 பேர் மீது இன்று (செப். 6) குற்றம் சாட்டப்படும் என்றும், இருவர் மீது விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் சிங்கப்பூர் காவல் படை (SPF) தெரிவித்துள்ளது.

தொழில்துறை கட்டிடத்தில் வெளிநாட்டவர் உட்பட 5 பேர் கைது – தீர்வை செலுத்தப்படாத சிகரெட்டுகள் பறிமுதல்

கடந்த ஆண்டு ஜூன் மாதம், செராங்கூன் கார்டன் வேயில் (Serangoon Garden Way) உள்ள பப்பில், சிலர் நுழைவது மற்றும் வெளியேறுவது பற்றி காவல்துறைக்கு புகார் கிடைத்ததாக தெரிவித்தனர்.

அதிகாரிகள் அங்கு வந்ததும், 15 பேர் ஒன்று கூடியிருப்பதைக் கண்டறிந்தனர் என்று SPF தெரிவித்துள்ளது.

அந்த நேரத்தில், வீட்டுக்கு வெளியே ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் ஒன்றுகூட அனுமதி இல்லை என்பதை SPF சுட்டிக்காட்டியது.

இந்த குற்றத்திற்கு S$10,000 வரை அபராதம், ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்று காவல்துறை தெரிவித்தனர்.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு நன்றியைத் தெரிவிப்பதற்காக தேவையான உதவிகளை செய்துவரும் பெண்