தேக்கா நிலையம், சுற்றியுள்ள கடைக்காரர்களுக்கு சோதனை… ஒருவருக்கு தொற்று உறுதி..!

Community case was detected through the ministry's community surveillance testing of stallholders in and around Tekka Centre
Community case was detected through the ministry's community surveillance testing of stallholders in and around Tekka Centre (PHOTO: Reuters)

சிங்கப்பூரில் இன்றைய (நவ. 28) நிலவரப்படி, புதிதாக 6 பேருக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சகம் (MOH) குறிப்பிட்டுள்ளது.

இதில் புதிதாக உள்ளூர் அளவில் ஒருவருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கால்வாய்க்குள் தவறி விழுந்த வேன் – குழந்தை உட்பட 4 பேர் மருத்துவமனையில் அனுமதி

கடந்த வியாழக்கிழமை, தேக்கா நிலையத்திலும் அதைச் சுற்றியுள்ள கடைக்காரர்களுக்கும் மேற்கொள்ளப்பட்ட சமூக கண்காணிப்பு சோதனை மூலம் இந்த புதிய சம்பவம் கண்டறியப்பட்டது.

புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் மீதமுள்ள 5 பேர் வெளிநாட்டிலிருந்து சிங்கப்பூர் வந்தவர்கள் என்றும் MOH குறிப்பிட்டுள்ளது.

அவர்கள் இங்கு வந்ததில் இருந்து வீட்டில் தங்கும் கட்டாய அறிவிப்பின்கீழ் தனிமைப்படுத்தப்பட்டனர்.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் எந்த புதிய கிருமித்தொற்றுச் சம்பவங்களும் பதிவாகவில்லை.

இந்த புதிய பாதிப்புகளுடன் சேர்த்து, சிங்கப்பூரில் பாதிக்கப்பட்ட நபர்களின் மொத்த எண்ணிக்கை 58,205ஆக உள்ளது.

16 வயது சிறுவன் உட்பட 87 போதைப்பொருள் சந்தேக குற்றவாளிகள் கைது!

2 நாளில் மூன்று ஊழியர்கள் வேலையிடத்தில் உயிரிழப்பு – கட்டுமான பாதுகாப்பு குறித்த மறுஆய்வு

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…