‘Toa Payoh’- வில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து!

Photo: SCDF Official Facebook Page

சிங்கப்பூரில் உள்ள Block 52 Lorong 6 Toa Payoh- வில் வீடமைப்பு வளர்ச்சி கழகத்தின் (Housing and Development Board- ‘HDB’) அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று (31/01/2022) இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து நேற்று (31/01/2022) இரவு 10.25 PM மணிக்கு சிங்கப்பூர் சிவில் பாதுகாப்புப் படையினருக்கு (Singapore Civil Defence Force- ‘SCDF’) தகவல் தெரிவிக்கப்பட்டது.

சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சருடன் பிலிப்பைன்ஸ் வெளியுறவுத்துறைச் செயலாளர் சந்திப்பு!

அதைத் தொடர்ந்து, தீயணைப்பு வாகனங்களுடன் சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படையின் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்தனர். பின்னர், அடுக்குமாடி குடியிருப்பின் 9- வது மாடியில் (9th Floor) தீ கொளுந்துவிட்டு எரிந்ததைக் கண்ட தீயணைப்பு வீரர்கள், சுவாசக் கருவிச் செட்டை அணிந்துக் கொண்டு தீ விபத்து நிகழ்ந்த மாடிக்கு சென்றனர்.

அங்கு ஒரு வீட்டில் சர்வீஸ் யார்டில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பொருட்களில் (Items stored at the service yard) ஏற்பட்ட தீயைக் கவனித்த வீரர்கள், உடனடியாக தண்ணீரைப் பீய்ச்சியடித்தும், தீயணைப்பான்களைக் கொண்டும் தீயை முழுவதுமாக அணைத்தனர்.

சீனப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ள அமைச்சர் எஸ்.ஈஸ்வரன்!

இதனிடையே, சிங்கப்பூர் சிவில் பாதுகாப்புப் படையினர் வருவதற்கு முன்பாக, பாதிக்கப்பட்ட பிரிவில் இருந்த இரண்டு குடியிருப்பாளர்கள் உட்பட சுமார் 20 பேர் தாங்களாகவே வெளியேறிவிட்டனர். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதிக்கப்பட்ட பிளாக்கில் (Affected Block) இருந்து 30 பேரை காவல்துறையினர் மற்றும் சிங்கப்பூர் சிவில் பாதுகாப்புப் படையினர் பத்திரமாக வெளியேற்றினர்.

இந்த தீ விபத்தில் புகையைச் சுவாசித்த இருவரை சிங்கப்பூர் சிவில் மருத்துவக் குழுவினர் பரிசோதித்தனர். அதில், அவர்களுக்கு வேறு காயங்கள் எதுவும் ஏற்படாததால், அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மறுத்துவிட்டனர்.

“மியான்மரில் மக்களின் நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருகின்றன”- சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல்!

தீ விபத்து தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், பவர் அசிஸ்டட் சைக்கிளின் (Power Assisted Bicycle- ‘PAB’) பேட்டரி பேக்கில் இருந்து தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் சிவில் பாதுகாப்புப் படை ஆனது PMD/PAB தீயைத் தடுப்பது குறித்து பொதுமக்களுக்கு நினைவூட்ட விரும்புகிறது, இதில் பேட்டரிகளை நீண்ட நேரம் அல்லது ஒரே இரவில் சார்ஜ் செய்யக்கூடாது. அசல் அல்லாத பேட்டரிகளை (Non- Original Batteries) வாங்கவோ, பயன்படுத்தவோ கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது.

சிங்கப்பூரில் 5 வாகன நிறுத்துமிடங்களில் நிறுவப்பட்டுள்ள “மின்சார வாகன சார்ஜர்கள்”

இந்த தகவலை சிங்கப்பூர் சிவில் பாதுகாப்புப் படை தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.