துவாஸ் சோதனைச் சாவடி சம்பவம்: இரு வெளிநாட்டவர்களுக்கு சிறை தண்டனை

ICA

துவாஸ் சோதனைச் சாவடி கவுன்டர்களில் வருகை அனுமதி நடைமுறையைத் தவிர்க்க முயன்ற வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானது.

இந்நிலையில், கடந்த மாதம் ஏப். 9 ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தில் தப்பிக்க முயன்று விபத்தை ஏற்படுத்திய இரு வெளிநாட்டவர்களுக்கு 5 வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சாலையில் சென்றுகொண்டிருந்த வேன்., திடீரென சுழன்று சாலை தடுப்பு, வெளிநாட்டு ஊழியர் ஏற்றிச்செல்லும் லாரியில் மோதி விபத்து

சீன நாட்டை 35 வயதான சென் சோங்கிங் மற்றும் மற்றொருவர் 31 வயதான வியட்நாம் நாட்டவர் ஹோ தி மை நங் ஆகியோர் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

துவாஸ் சோதனைச் சாவடியின் மோட்டார் சைக்கிள் வருகை பகுதியில் தனது வாகனத்தை பின்னோக்கி ஓட்டி, குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணைய (ICA) அதிகாரியை தாக்கி காயம் ஏற்படுத்திய வழக்கில் தற்போது அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இதில், மலேசியப் பதிவு பெற்ற காரை ஓட்டிச் சென்ற சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த தியோ தியாம் லெங் (46) என்பவர் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதாக குற்றம் சாட்டப்பட்டார். இவர் மீதான வழக்கு விசாரணை அடுத்தவாரம் தொடரும்.

துவாஸ் சோதனைச் சாவடி கவுன்டர்களில் மோதி, அதிகாரிக்கு காயம் ஏற்படுத்தி தப்பிக்க முயன்ற 3 பேர் – நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு!

தேக்கா சென்டரில் சண்டை… இருவரை கைது செய்தது போலீஸ் – வீடியோ வைரல்