கோவிட்-19 தடுப்பூசி போட விருப்பமில்லாதவர்கள், மருத்துவச் செலவுகளை அவர்களே ஏற்றுக்கொள்ள அறிவிப்பு!

(Photo: Ministry of Health)

2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 8ம் தேதியிலிருந்து கோவிட்-19 தடுப்பூசி போடுவதற்கு விருப்பமில்லாத மக்கள், ஒருவேளை கிருமித் தொற்றினால் பாதிப்படைந்து மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், அதற்கான செலவுகளை அவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இந்த புதிய செயல்முறை வருகின்ற டிசம்பர் மாதம் 8ம் தேதியிலிருந்து நடைமுறைப் படுத்தப்படும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங், தற்போது கோவிட்-19 சூழலைப் பற்றி நடந்த பணிக்குழு உரையாடல் ஒன்றில் இந்த புதிய அமல் பற்றி எடுத்துரைத்தார்.

பணம் அனுப்பும் சேவையில், பல்வேறு நாடுகளுக்குப் பணம் அனுப்ப சிங்டெல் புதுத் திட்டம்!

இந்த அறிவிப்பின் மூலம் சிங்கப்பூரில் உள்ள அனைத்து மக்களுக்கும் கோவிட்-19 தடுப்பூசி போட்டுக் கொள்வது எவ்வளவு அவசியமானது என்று உணர்த்தியுள்ளார்.

தடுப்பூசி போட்டுக்கொள்ள விருப்பமில்லாதவர்கள், கோவிட்-19 கிருமித் தொற்றினால் பாதிக்கபட்டால் அதற்குரிய மருத்துவச் செலவுகளை அவர்களே பொறுப்பேற்க வேண்டும் என்ற இந்த செயல்முறைக்கு பணிக் குழுவின் இணைத் தலைவர்களில் ஒருவரான திரு ஒங் ஆழமாக வலியுறுத்தினார்.

கோவிட்-19 கிருமித் தாெற்று பெரும் பாதிப்பிற்கு நாட்டையே உள்ளாக்கும் ஒரு கொடிய நாேய்த்தொற்று. இந்த கிருமித் தொற்றின் தாக்கத்தை மக்கள் இன்னும் முழுமையாக புரிந்துக் கொள்ளவில்லை என்பதே உண்மை.

இதனால் பாதிக்கப்படும் சிங்கப்பூரர்கள், சிங்கப்பூரில் நீண்டகால அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள், சிங்கப்பூரின் நிரந்தரவாசிகள் மற்றும் கோவிட்-19 தொற்றுக்கு பிறகு வெளிநாடு செல்லாதவர்கள்.

மேற்கண்டவர்களை தவிர மற்ற அனைவருக்கும் அவர்களின் பொருளாதார நெருக்கடியை குறைக்கும் மனப்பான்மையுடன் சிங்கப்பூர் அரசு அவர்களின் மருத்துவ செலவுகளை ஏற்றுக்கொண்டது.

இவ்வாறு அரசு பல சலுகைகளை மக்களுக்கு செய்து வருகிறது. இருப்பினும் கோவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தகுதியிருந்தும், தடுப்பூசி போடாதவர்களின் அலட்சியத்தை சரிசெய்யவே அரசு இந்த புதிய செயல்முறைகளை அறிவித்துள்ளது.

பொதுவாக கோவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ள விருப்பமில்லாதவர்களின் அடிப்படை காரணமே அதிக மருத்துவச் செலவுகள் இருக்கக் கூடாது என்பதே.

ஆனால் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அதிகமாக அனுமதிக்கப்படுவோரில் நிறைய போ் தடுப்பூசி போடாதவர்களே.

இதனால் சிங்கப்பூரின் சுகாதாரப் பராமரிப்பு வளங்கள் பெரிதும் பாதிப்பிற்குள்ளாவதால் சிங்கப்பூர் அரசு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது என்று அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

தற்போது வெளிநாட்டிலிருந்து வருபவர்களில் நோய்த்தொற்று இருப்பவர்களை தவிர, மற்றவர்களுக்கு கோவிட்-19 செலவுகளை சிங்கப்பூர் அரசே முழுமையாக பொறுப்பேற்றுள்ளது.

கோவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தகுதியிருந்தும், தடுப்பூசி போடாதவர்கள் வருகின் டிசம்பர் 8ஆம் தேதி முதல் கோவிட்-19 சிகிச்சைக்கான செலவுகளை அவர்களே பொறுப்பேற்க வேண்டியிருக்கும்.

இருப்பினும் தற்போதைய சூழலில் வழங்கப்பட்டு வரும் மருத்துவக் கட்டணங்கள் மெடிஷீல்ட் லைஃப் கோரிக்கை மற்றும் மெடிசேய் பயன்பாடுகளைப் பொருத்தே கணக்கிடப்படும்.

மேலும் சர்க்கரை வியாதி, உயர் ரத்த அழுத்தம் போன்ற ஒருசில மருத்துவக் காரணங்களால் தடுப்பூசி போட முடியாதவர்கள் மற்றும் 12 வயதுதிற்கு கீழ் உள்ளவர்கள்.

இவர்களில் தடுப்பூசிக்குத் தகுதி பெறாதவர்களின் கோவிட்-19 தொற்று சிகிச்சைக்கான மருத்துவச் செலவுகளை சிங்கப்பூர் அரசே ஏற்றுக்கொள்ளும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

வியட்நாமுக்கு 2 லட்சம் ART கருவி உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கிய சிங்கப்பூர்