வெளிநாட்டு ஊழியர்களுக்கான இழப்பீட்டு தொகை அதிகரிப்பு.. $346,000 வரை உயர்வு

workplace injury compensation-limits update mom
(Photo by Roslan RAHMAN / AFP)

வேலையிடங்களில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கான இழப்பீடு தொகையை மனிதவள அமைச்சகம் உயரத்தவுள்ளது.

ஊழியர்களின் சம்பள உயர்வு மற்றும் மருத்துவ செலவினங்களின் அதிகரிப்புக்கு ஏற்ப அவர்களுக்கான இழப்பீடு தொகை உயரும் என கூறப்படுகிறது.

வேலையில் இருந்து தூக்கப்பட்ட ஊழியர்கள் வேறு வேலையில் சேருவதில் இருக்கும் கட்டுப்பாடுகள்.. வேறு வேலையில் சேர முடியுமா?

இந்த புதிய மாற்றங்கள் அடுத்த ஆண்டு 2025 நவம்பர் முதல் நடப்புக்கு வரும் என சொல்லப்பட்டுள்ளது.

வேலையிடத்தில் ஏற்படும் விபத்தின் தன்மையை பொறுத்து இழப்பீட்டு தொகை வரம்பு மாறுபடும் என்பது குறிப்பிடத்தகக்கத்து.

புதிய மாற்றங்கள்

அதாவது, வேலையிடத்தில் ஏற்படும் மரணங்களுக்கு இனி இழப்பீட்டு தொகை வரம்பு $269,000 என்று கூறப்பட்டுள்ளது.

அதேபோல, படுத்தப் படுக்கையாக போடும் நிரந்தரமான உடல் பாதிப்புகளுக்கு இனி அதிகபட்சமாக $346,000 வெள்ளி இழப்பீட்டு தொகையாக வழங்கப்படும்.

மேலும், காயங்களுக்கான மருத்துவ செலவினங்களுக்கு இழப்பீட்டு தொகை வரம்பு இனி $53,000 ஆக உயரும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மாற்றங்கள் வேலையிட காயங்களுக்கான இழப்பீட்டுச் சட்டத்தின்கீழ் வரும் என்பது கூடுதல் தகவல்.

சிங்கப்பூரில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு மிக மோசமான ஆண்டு இது.. வேலை பறிபோய்விடும், சம்பளம் குறையும் என அச்சம்