வெற்றிகரமாக தகர்த்தப்பட்ட 2ம் உலகப் போர் வெடிகுண்டு: “பாதிக்கப்பட்ட பகுதிக்கு செல்லவேண்டாம்” – போலீஸ்

WWII bomb in Upper Bukit Timah successfully destroyed
Photo: SPF, Yi Zhou

அப்பர் புக்கிட் திமா கட்டுமான தளத்தில் கண்டெடுக்கப்பட்ட உலகப் போர் வெடிகுண்டு இரண்டாம் கட்டமாக வெடிக்கச் செய்யப்பட்டது.

முதல் கட்டமாக இன்று (செப்.26) மதியம் 12.30 மணியளவிலும், பின்னர் இரண்டாவதாக 1:50 மணியளவில் அது தகர்த்தப்பட்டது.

சமையலறை ஜன்னலுக்கு வெளியே 29 வயது பெண்ணின் சடலம் – பணிப்பெண்ணா? நெட்டிசன்கள் கமெண்ட்

அதனை சுற்றி பாதுகாப்புக்கு சுற்றுசுவர் மற்றும் மணல் மூட்டைகள் போடப்பட்டு இருந்தன.

பலத்த சத்தத்துடன் அது வெடித்ததில் மணல்மூட்டைகள் பறந்து சிதறுவதை நம்மால் காண முடிகிறது.

இன்று காலை சுமார் 4,000 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் அந்த பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

அவர்கள் செஞ்சா- கேஷ்யூ சமூக மன்றத்தில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்த பலத்த சத்தம் பலருக்கு அச்சத்தை ஏற்படுத்தியது, சிலர் இந்த சத்தத்தால் அலறியதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

இரண்டு வெடிப்புகளைத் தொடர்ந்து அது வெற்றிகரமாக அகற்றப்பட்டதாக CNA தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட சாலைகள் மற்றும் புக்கிட் பஞ்சாங் மேம்பாலம் மற்றும் அப்பர் புக்கிட் திமா சாலை ஆகியவை தொடர்ந்து மூடப்பட்டுள்ளன.

மறு அறிவிப்பு வரும் வரை பொதுமக்கள் பாதிக்கப்பட்ட பகுதிக்கு செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இரண்டாம் உலகப் போர் வெடிகுண்டு முதல் தகர்ப்பு: பலத்த சத்தம்… சிதறிய பறவைகள்

உலகப் போர் வெடிகுண்டு: 4000 பேர் பாதிப்பு – பேருந்து நிறுத்தங்கள் மூடல்

இரண்டாம் உலகப் போர் வெடிகுண்டு முதல் தகர்ப்பு: பலத்த சத்தம்… சிதறிய பறவைகள்