சிங்கப்பூரில் தொடர்ந்து பாதுகாப்பு விதிமுறைகளை மீறுவோர் பிடிபட்டு வருகின்றனர்..!

Coronavirus: 150 caught breaching safe distancing rules, 50 did not wear masks outside homes
Coronavirus: 150 caught breaching safe distancing rules, 50 did not wear masks outside homes (Photo: Masagos ZulkIfli/FB)

சிங்கப்பூரில் புதன்கிழமை (ஏப்ரல் 22) நிலவரப்படி, சுமார் 150 பேர் பாதுகாப்பான இடைவெளி நடவடிக்கைகளுக்கு இணங்காத குற்றத்திற்காக பிடிபட்டனர்.

அதே போல், 50-க்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளுக்கு வெளியே முகக்கவசம் அணியாமல் சென்றதற்காக பிடிபட்டனர்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் எட்டு புதிய நோய் பரவல் குழுமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன – சுகாதார அமைச்சகம்..!

நேற்று புதன்கிழமை இரவு முகநூல் பதிவில், சுற்றுச்சூழல் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் மசகோஸ் சுல்கிஃப்லி, சிங்கப்பூரர்களை வீட்டில் இருக்க வேண்டும் என்று ஊக்குவித்தார்.

மேலும் பிடிப்பட்டவர்களின் இந்த விதிமீறல் நடவடிக்கை, அவர்களின் குடும்பங்களுக்கும் சமூகத்திற்கும் ஆபத்தை ஏற்படுத்துவதை அவர்கள் உணர்வார்கள் என்று நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று புதன்கிழமை சந்தைகளில் குறைந்த அளவு கூட்டத்தை அதிகாரிகள் கண்டதாகவும், கூடுதல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் நோக்கங்களை மக்கள் புரிந்துகொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : COVID-19: மேலும் இரண்டு வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு..!

சர்க்யூட் பிரேக்கர் என்னும் இந்த அதிரடி நடவடிக்கை எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது நம் ஒவ்வொருவரையும் பொறுத்து அமையும் என்று அவர் குறிப்பிட்டார்.

முடிந்தவரை நாம் வீட்டிலேயே இருக்கும் பட்சத்தில், உள்ளூர் நோய் பரவல் எண்ணிக்கையை குறைக்க நாம் உதவலாம் என்று அவர் மேலும் கூறினார்.

Here are 3 tips if you are planning to visit any of our 4 most popular markets tomorrow, which are at Blk 20/21…

Posted by Masagos Zulkifli on Wednesday, April 22, 2020