சிங்கப்பூரில் மீண்டும் அதே விதிமுறை மீறலில் ஈடுபட்ட 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு $1,000 அபராதம்..!

10 people will be fined $1,000 each
More than 10 people will be fined $1,000 each for repeated breaches of safe distancing measures, including not wearing a mask in public. (PHOTO: MASAGOS ZULKIFLI/FACEBOOK)

சிங்கப்பூரில் பாதுகாப்பு இடைவெளி நடவடிக்கைகளுக்கு இணங்காத சுமார் 240 பேருக்கு தலா $300 அபராதம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 19) விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், வீடுகளுக்கு வெளியே முகக் கவசம் அணியாமல் சென்ற சுமார் 120 பேருக்கு $300 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் மேலும் 5 வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு..!

பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் சென்றது உட்பட பாதுகாப்பான இடைவெளி நடவடிக்கைகளை மீண்டும் மீறியதற்காக 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு தலா $1,000 அபராதம் விதிக்கப்படும் என்று சுற்றுச்சூழல் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் மசகோஸ் சுல்கிஃப்லி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த வார இறுதியில் மீண்டும் பல சந்தைகளில் நீண்ட வரிசைகள் காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

With the current circuit breaker measures, more households are now cooking at home. To prepare meals for our families,…

Posted by Masagos Zulkifli on Sunday, April 19, 2020

கெய்லாங் செராய் சந்தையில் சுமார் 200 பேர் வரிசையில் நின்றனர், சந்தைக்குள் நுழைய சராசரியாக குறைந்தது 30 நிமிடங்கள் ஆனதாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையில், தேக்கா சந்தையில் எந்த வரிசையும் இல்லை என்றும், 505 ஜுராங் வெஸ்டில், சிறிய வரிசை காணப்பட்டது என்றும், சந்தைக்குள் நுழைய 10 நிமிடங்களுக்கும் குறைவாகவே ஆனது என்றும் கூடுதலாக குறிப்பிட்டுள்ளார்.

வார நாட்களில், உச்ச நேரங்களில் செல்வதை தவிர்ப்பது அல்லது அதிக பிரபலம் இல்லாத சந்தைகளுக்குச் செல்வதன் மூலம் கூட்டத்தை குறைக்கலாம், நாம் அனைவரும் நம்மால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டியது மிக முக்கியம் என்றார்.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு சங்கர் மகாதேவனின் காணொளி..!