சிங்கப்பூரில் கட்டுப்பாடுகள் தளர்வு 2ஆம் கட்டம் – திருமணம் மற்றும் இறுதி சட்டங்களில் அனுமதிக்கப்படும் கூட்டம்..?

marriage-of-convenience-related offences foreigners
(Photo: India filings)

சிங்கப்பூரில் கட்டுப்பாடுகள் தளர்வின் 2ஆம் கட்டம் (Phase 2 of reopening) வரும் ஜூன் 18, இரவு 11.59 மணிக்குப் பிறகு தொடங்கும் என்று COVID-19 பல அமைச்சக பணிக்குழு இதனை அறிவித்துள்ளது.

இந்நிலையில், பல்வேறு நடவடிக்கைகள் தொடங்க உள்ள நிலையில், திருமணங்களுக்கான நடைமுறை விதிகளில் கூடுதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் கட்டுப்பாடுகள் தளர்வின் 2ஆம் கட்டத்தில் மீண்டும் தொடங்குபவை எவை எவை?

பதிவுத் திருமண அலுவலகம் அல்லது வீட்டிலோ திருமணம் நடைபெற்றால் திருமணத்தை நடத்தி வைப்பவரைத் தவிர்த்து 10 பேர் வரை அந்த இடங்களில் ஒன்றுகூடலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அவற்றை தவிர்த்து மற்ற இடங்களில் நடைபெற்றால் 20 பேர் வரை கலந்துகொள்ளலாம். அந்த எண்ணிக்கையில் திருமணப் பதிவு அதிகாரி கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழிபாட்டுத் தலங்கள், வீடு, உணவகங்கள், ஹோட்டல் சிறு அறைகள் இதுபோன்ற இடங்களில் திருமணங்கள் நடைபெறுவதற்கு, புதிய அனுமதி பொருந்தும் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டெஸ்மண்ட் லீ குறிப்பிட்டுள்ளார்.

வாழ்க்கையின் முக்கியமான தருணத்தைக் கொண்டாட குடும்ப உறுப்பினர்களும் நண்பர்களும் விரும்புவதை தம்மால் புரிந்துகொள்ள முடிவதாகவும், இருப்பினும் நமது மூத்தோரைக் கருத்தில் கொண்டு கவனமாக இருப்பது அவசியம் என்றும் திரு. லீ தெரிவித்துள்ளார்.

மேலும் இணையம் வழியான திருமணப் பதிவுகளை ஊக்குவிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இறுதி சடங்குகளிலும் ஒரு நேரத்தில் 20 பேர் வரை ஒன்றுகூட அனுமதி வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்ப்ப்ட்டுள்ளது.

இதையும் படிங்க : COVID-19: சிங்கப்பூரில் இரண்டாம் கட்டத் தளர்வு வரும் ஜூன் 18 தொடக்கம்..

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?? Facebook – https://www.facebook.com/tamilmicsetsg/

?? Helo          – http://m.helo-app.com/al/vppxQmsFr

?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg

??Telegram  – https://t.me/tamilmicsetsg

?? Sharechat – https://sharechat.com/tamilmicsetsg