இந்தோனேசிய நிலநடுக்க மீட்புப் பணிகளில் உதவ சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்திடம் நன்கொடை வழங்கும் சிங்கப்பூர் அரசு!

Photo: Indonesian Red Cross Official Twitter Page

இந்தோனேசிய நிலநடுக்க மீட்புப் பணிகளில் உதவ சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்திடம் நன்கொடை வழங்கப்படும் என்று சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது.

மலேசியாவின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள அன்வர் இப்ராஹிமுக்கு சிங்கப்பூர் பிரதமர் வாழ்த்து!

இந்தோனேசியா நாட்டில் உள்ள ஜாவா தீவின் மேற்கு பகுதியில் கடந்த நவம்பர் 21- ஆம் தேதி அன்று மதியம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுக்கோலில் 5.6 ஆகப் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 270 ஆக அதிகரித்துள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கிப் படுகாயமடைந்த ஆயிரக்கணக்கானோர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனிடையே, 100- க்கும் மேற்பட்டோர் காணவில்லை என்றும், அவர்களை பேரிடர் மீட்புப் படையினர் தேடி வருவதாகவும் தகவல் கூறுகின்றன.

நிலநடுக்கம் மையம் கொண்டிருந்த சியாஞ்சூர் பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால், 58,000- க்கும் மேற்பட்டோர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சுமார் 20,000- க்கும் மேற்பட்டோர் தங்களது வீடுகளை இழந்துள்ளனர்.

பாலின அறுவை சிகிச்சை செய்த கைதியை எந்த சிறையில் அடைப்பது? – ஆண்கள் சிறையிலா? மகளிர் சிறையிலா?

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் உலக நாடுகளைச் சேர்ந்த செஞ்சிலுவைச் சங்கத்தினர் மற்றும் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

அதேபோல், உலக நாடுகளும் இந்தோனேசியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி மற்றும் மருந்துப் பொருட்கள் மற்றும் உணவுகளை அனுப்பி வருகின்றனர். அந்த வகையில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் சுமார் 50,000 அமெரிக்க டாலர்களை நன்கொடையாக வழங்குவதாக உறுதியளித்திருந்தது.

இந்த நிலையில், சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் (Ministry Of Foreign Affairs, Singapore) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “இந்தோனேசிய நிலநடுக்க மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் உதவ சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்திடம் சுமார் 1,00,000 அமெரிக்க டாலர் நன்கொடையாக வழங்கப்படும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, கூடாரங்கள் அமைப்பது, மருத்துவப் பொருட்கள், குடிநீர் வழங்குவது போன்ற அத்தியாவசிய தேவைக்களுக்காக, இந்த நன்கொடையை சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் பயன்படுத்தும்.

“10 வயது சிறுவன் மற்றும் 73 வயது பெண்ணை காணவில்லை”- தகவல் கொடுக்குமாறு சிங்கப்பூர் காவல்துறை வேண்டுகோள்!

மேலும், சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் 50,000 அமெரிக்க டாலர் நன்கொடை வழங்கப்படும் என்ற அறிவிப்புக்கு ஆதரவு அளிக்கும் வகையில், சிங்கப்பூர் அரசு இந்த நன்கொடையை அளிக்க உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது.