சென்தோசா தீவில் உள்ள கடலில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட கயாக் படகோட்டி, கூ டெக் புவாட் மருத்துவமனையில் முன்னாள் செவிலியராக பணியாற்றியதாக சொல்லப்பட்டுள்ளது.
அதோடு, சொந்தமாக தானே தயாரித்த சோப்புகளை விற்கும் உள்ளூர் வர்த்தகத்தின் நிறுவனராகவும் அவர் இருந்துள்ளார்.
வெளிநாட்டு ஊழியர்களுக்கு எந்தந்த துறைகளில் வேலை அதிகரித்துள்ளது – தெரிந்துகொள்ளுங்கள்
33 வயதான Chew Jia Tian என்ற அந்த பெண்மணி, சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகத்தில் (SIT) நர்சிங் பட்டம் பெற்றவர்.
அந்த பெண்மணி எளிமையானவர் என்றும், அனைவரிடமும் நட்புடன் பழகுவார் என்றும், மற்றவர்களுக்கு உதவும் எண்ணம் கொண்டவர் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
கடலில் விழுந்த தன் நண்பரை காப்பற்ற சென்றபோது Chew உயிரிழந்ததாக முன்னர் செய்திகள் வெளியிட்டோம்.
அவற்றை படியுங்கள்:
“தனது நண்பரை காப்பற்ற முயன்றபோது கடலில் அடித்துச்செல்லப்பட்டார்..” – காணாமல் போனவர் குறித்த தகவல்