நாகேந்திரன் கே. தர்மலிங்கம் வழக்கு: கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டது குறித்து மலேசியாவுக்கு பதில் கூறிய பிரதமர் திரு லீ!

Nagaenthran Dharmaling executed due-process-lee-hsien-loongam
Mother of Nagaenthran K. Dharmalingam, Panchalai Supermaniam (Photo: Miera Zulyana)

மலேசிய போதைப்பொருள் கடத்தல்காரர் நாகேந்திரன் தர்மலிங்கத்தின் தண்டனையில், சட்டத்தின்கீழ் அனைத்தும் முழுமையாக கடைபிடிக்கப்பட்டது என்று பிரதமர் லீ சியென் லூங் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் ஆகியோர் தெரிவித்தனர்.

மலேசியப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் மற்றும் வெளியுறவு அமைச்சர் சைபுதீன் அப்துல்லா ஆகியோருக்குப் பதிலளிக்கும் விதமாக அதனை அவர்கள் தெரிவித்தனர்.

ஆடவரை கொலைசெய்ததாக சந்தேகிக்கப்படும் வெளிநாட்டு பணிப்பெண்… நீதிமன்றத்தில் ஆஜர்!

நாகேந்திரனின் மரண தண்டனையை பரிசீலனை செய்து அதனை மாற்றும் படி அவர்கள் இருவரும், திரு லீ மற்றும் டாக்டர் பாலகிருஷ்ணனுக்கு இந்த வாரம் கடிதம் அனுப்பி கோரிக்கை வைத்ததாக மலேசியாவின் அரசு செய்தி நிறுவனமான பெர்னாமா இது பற்றி கூறியுள்ளது.

இந்நிலையில், சட்டம் தன் கடமையை செய்தது என்பதை சிங்கப்பூர் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இதில் சட்டத்தின் கீழ் உள்ள அனைத்தும் நடைமுறைகளும் பின்பற்றப்பட்டதாக திரு லீ மற்றும் டாக்டர் பாலகிருஷ்ணன் கூறினர்.

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிங்கப்பூரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த மலேசியர் நாகேந்திரன் கே. தர்மலிங்கம் கடந்த ஏப். 27, 2022 அன்று தூக்கிலிடப்பட்டார்.

சிங்கப்பூரில் இறுதியாக தூக்கிலிடப்பட்ட நாகேந்திரன் கே. தர்மலிங்கம்… சட்டம் தன் கடமையை செய்தது!

சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்ட நாகேந்திரன் உடல் மலேசியா சென்றது… கண்ணீரில் மிதந்த குடும்பம்!

சிங்கப்பூரில் மேலும் ஒரு வெளிநாட்டு ஊழியர் கோர விபத்தில் பலி