“அளவுக்கு அதிகமானோர் ஒன்று கூடல்” – சிங்கப்பூரில் இரவு நேர ரோந்துப்பணி அதிகரிக்கப்படும்..!

Night patrol in Singapore will increase
Night patrol in Singapore will increase (Photo: Mothership)

சிங்கப்பூரில் இரவு நேரங்களில் அதிகாரிகள் ரோந்து பணியை அதிகரிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அச்சமயம் பாதுகாப்பான இடைவெளி விதிமுறைகளை மீறுவோர் மீது அமலாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரின் 2ம் கட்டத் தளர்வு – ஆர்ச்சர்ட் ரோடு ஷாப்பிங் வட்டாரத்தில் குவிந்த மக்கள்..!

COVID-19 ஒரு அச்சுறுத்தலாகவே உள்ளது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும், மேலும் பொறுப்புடன் செயல்படுங்கள், மற்றவர்களுடனான தொடர்பைக் கட்டுப்படுத்துங்கள், கூடுதலாக நல்ல தனிப்பட்ட சுகாதாரத்தைக் கடைப்பிடிக்கவும் என்று சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி தமது முகநூல் பதிவில் வலியுறுத்தியுள்ளார்..

ஹாலந்து வில்லேஜ் (Holland Village) போன்ற பகுதிகளில் அளவுக்கு அதிகமானோர் ஒன்று கூடியிருப்பதைக் காட்டும் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

அவற்றை தனது பதிவில் சுட்டிக்காட்டிய அமைச்சர், பாதுகாப்பான இடைவெளியைக் கடைப்பிடித்தல், முகக் கவசம் அணிதல் போன்ற நல்ல பழக்கங்களை அனைவரும் பின்பற்றவேண்டும் என்று வலியுறுத்தினார்.

குறைந்தது 1 மீ இடைவெளியில் மற்றவர்களிடமிருந்து பாதுகாப்பான இடைவெளியை வைத்திருங்கள், முடிந்தவரை உடல் ரீதியான தொடர்புகளை குறைத்து, சாப்பிட்ட பிறகு அல்லது குடித்தபின் உங்கள் முகக்கவசங்களை மீண்டும் அணியுங்கள், மேலும் கூட்டத்தை குறுகிய அளவில் வைத்திருங்கள் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் அருங்காட்சியகங்கள், இந்திய பாரம்பரிய மையம் உள்ளிட்டவை மீண்டும் திறக்கப்படும்..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook https://www.facebook.com/tamilmicsetsg/
?? Helo          http://m.helo-app.com/al/vppxQmsFr
?? Twitter      https://twitter.com/tamilmicsetsg
??Telegram  https://t.me/tamilmicsetsg
?? Sharechat https://sharechat.com/tamilmicsetsg