சிங்கப்பூரில் வீடற்றவர்களுக்கு போதுமான அளவு பாதுகாப்பான தங்கும் இடவசதிகள் உள்ளது – டெஸ்மண்ட் லீ..!

சிங்கப்பூரில் வீடற்றவர்களுக்கு தற்போது போதுமான அளவு பாதுகாப்பான தங்கும் இடவசதிகள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது வீடற்றவர்களுக்காக 700 இட வசதிகள் உள்ளதாக சமூக மற்றும் குடும்ப மேம்பாட்டுத்துறை அமைச்சர் டெஸ்மண்ட் லீ (Desmond Lee) வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 24) முகநூல் பதிவில் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்கசிங்கப்பூரில் புதிதாக 897 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!

இவற்றில் 250 இடங்கள் மட்டுமே தற்போது நிரம்பியுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பான, S3Ps என்று அழைக்கப்படும் இந்த தங்குமிடங்கள், 35 அமைப்புகளால் நடத்தப்படுகின்றன.

சிங்கப்பூரில் உள்ள வீடற்றவர்களுக்கு உதவுவதற்காக சமூக மற்றும் குடும்ப மேம்பாட்டு அமைச்சகம் (MSF), பிற அரசு நிறுவனங்கள் மற்றும் சமூக பங்காளிகளை ஒன்றிணைக்கும், இந்த கட்டமைப்பு கடந்த 2019 ஜூலையில் தொடங்கப்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்க்யூட் பிரேக்கரின் போது, ​​அனைவரும் (அவர்களின்) உடல்நலம் மற்றும் பாதுகாப்பிற்காக வீட்டில் இருக்க வேண்டும், ஆனால் வீடற்றவர்கள் எங்கும் செல்ல முடியாது என்பதையும் திரு லீ குறிப்பிட்டார்.

இதுவரை 35 அமைப்புகள் தங்களுடன் சேர முன்வந்துள்ளன என்றும், வீடற்றவர்களுக்கு உதவ தங்கள் வளாகங்களையும், வளங்களையும் வழங்கியுள்ளதாக திரு லீ தெரிவித்தார்.

இதையும் படிங்க சிறப்பு விமானம் மூலம் சவுதி அரேபியாவிலிருந்து சிங்கப்பூருக்கு 85 பேர் திரும்பினர்..!