மலேசியா செல்லும் வெளிநாட்டினர் கவனத்திற்கு.. சிங்கப்பூர் மக்களுக்கு டிஜிட்டல் வருகை அட்டை விலக்கு

Canva

மலேசியா செல்லும் சிங்கப்பூர் குடிமக்கள் ஜன. 1, 2024 முதல், அந்நாட்டின் டிஜிட்டல் வருகை அட்டையை (MDAC) சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.

இந்த செய்தியை மலேசிய உள்துறை அமைச்சர் சைபுதீன் நசுதின் இஸ்மாயில் நேற்று (டிச.5) கோலாலம்பூரில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

வெளிநாட்டு ஊழியர்களை ஏமாற்றிய பெண்.. தன் நண்பர்களையும் சேர்த்து விட்ட ஊழியர் – சிங்கப்பூரில் வேலைபார்த்த பெண்ணின் ட்ரிக்

மலேசியா செல்லும் வெளிநாட்டினர் அனைவரும் டிச.1, 2023 முதல் டிஜிட்டல் வருகை அட்டையை (Malaysia Digital Arrival Card – MDAC) சமர்ப்பிப்பது கட்டாயம் என முன்னர் அறிவிக்கப்பட்டது.

மலேசியாவின் நிரந்தரவாசிகள், மலேசியா தானியாக்க குடிநுழைவு அனுமதி (Malaysia Automated Clearance System pass) வைத்திருப்பவர்களுக்கு அதிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிங்கப்பூர் குடிமக்களுக்கும் அதிலிருந்து விளக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தற்போது சொல்லப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர், குடிநுழைவு அனுமதி பெற தேவையின்றி சிங்கப்பூர் வழியாக இடைவழி செல்பவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு கொடுக்கப்பட்டது.

மலேசியாவிற்குள் நுழையும் வெளிநாட்டினர், சோதனைச் சாவடிகளுக்கு வந்த பிறகு அட்டையை நிரப்புவதாக சைபுதீன் கூறினார்.

சிங்கப்பூரில் தமிழ் ஊழியரின் நண்டு ரசம்.. நோய்களை நீக்கும் மாமருந்து – “Our Migrants’ Kitchen” எனும் நூலில் இடம்பிடித்த தமிழர்

ஏனென்றால், அனைத்து வருகையாளர்களும் இந்த புதிய திட்டத்தைப் பற்றி அறிந்திருக்க மாட்டார்கள் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

ஆனால், ஜன. 1, 2024 முதல் மலேசியாவிற்கு வருவதற்கு முன் “இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள்” அட்டையை பூர்த்தி செய்தி சமர்பிப்பது கட்டாயம் ஆகும்.

சிங்கப்பூரில் வசிக்கும் இந்தியர்களுக்கு குட் நியூஸ்.. சிங்கப்பூரில் இருந்து மலேசியா.. படையெடுக்கும் கூட்டம்

மலேசியா செல்லும் வெளிநாட்டினர் அனைவரும் MDAC அட்டையை சமர்ப்பிக்க வேண்டும்